News June 15, 2024
₹54 லட்சம் கோடியாக உயர்ந்த அன்னிய செலாவணி

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த 7ஆம் தேதி நிலவரப்படி ₹54.72 லட்சம் கோடியாக உள்ளது. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் ஏறத்தாழ ₹36,000 கோடி அதிகமாகும். இதுபோல அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரித்ததற்கு, இந்தியாவிடம் இருக்கும் வெளிநாட்டு கரன்சிகள் ₹31,000 கோடி அதிகரித்து, ₹48 லட்சம் கோடியாக உயர்ந்தது முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.
Similar News
News April 9, 2026
மதுரை: Degree போதும்.. இந்தியன் வங்கியில் வேலை

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ரூ.48,480-ரூ.1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) <
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க
News April 9, 2026
முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்

காங்கிரஸ் மூத்த தலைவர் அபு ஹாசிம் கான் சவுத்ரி(89) உடல் நலக்குறைவால் காலமானார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர் 3 முறை MP ஆகவும், 2012 முதல் 2014 வரை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றினார். இந்நிலையில் அபு ஹாசிம் கான் சவுத்ரி மதச்சார்பின்மை, சமூகநீதி போன்றவற்றை உயர்த்திப் பிடித்தவர் என்று காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார்.
News April 9, 2026
மத்திய அரசிடம் வீரத்தை காட்டுங்க EPS: அன்பில்

EPS ஒருமுறையாவது நீட் வேண்டாம் என்றோ, மும்மொழி கொள்கையை திணிக்காதீர்கள் என்றோ PM மோடியிடம் வலியுறுத்தி இருக்கிறாரா என அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். CM ஸ்டாலின் பற்றி விமர்சிக்கும் EPS-க்கு பதிலடி கொடுத்த அவர், அண்ணா பெயரில் கட்சி வைத்துகொண்டு, இருமொழி கொள்கையை காக்க EPS-ஆல் முடிந்ததா எனவும் கேட்டார். மத்திய அரசிடம் வீரத்தை காட்டாமல் CM மீது மலிவான விமர்சனத்தை கொட்டுவதாகவும் சாடியுள்ளார்.


