News April 28, 2025

கட்டாயத்தின் பேரில் நீக்கம்: தமிழிசை தாக்கு

image

இருண்ட கால ஆட்சியில் இருந்து 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். TN அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் விலகியுள்ள நிலையில், மக்கள் மன்றம், நீதிமன்றத்தின் கட்டாயத்தால் அவர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என தமிழிசை கூறியுள்ளார். இந்த நடவடிக்கை தானாக எடுக்கப்பட்டது அல்ல; தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது என்றும் விமர்சித்துள்ளார்.

Similar News

News October 20, 2025

₹66 கோடி வசூலித்த ‘டியூட்’

image

பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ உலகளவில் மூன்றே நாள்களில் ₹66 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும், தீபாவளி விடுமுறை காரணமாக வசூல் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதே நிலை நீடித்தால் ‘டியூட்’ ₹100 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்க ‘டியூட்’ பார்த்துட்டீங்களா? படம் எப்படி இருக்கு?

News October 20, 2025

BREAKING: மிக கனமழை வெளுக்கும்

image

ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், குமரி, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் IMD கணித்துள்ளது. அதனால், தீபாவளிக்கு வெளியே சுற்றுபவர்கள் கவனமா இருங்க!

News October 20, 2025

மூத்த அரசியல்வாதி காலமானார்!

image

பாஜகவை சேர்ந்த மூத்த அரசியல்வாதி மகாதேவ்ராவ் சிவங்கர்(83) காலமானார். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் 5 முறை MLA-வாக, அம்மாநிலத்தின் நிதியமைச்சராக ஜூன் 1997- அக்டோபர் 1999 வரை பதவியில் இருந்துள்ளார். மேலும், 2004- 2009 வரை MP-யாகவும் பணியாற்றினார். இவரின் மறைவுக்கு பாஜக மூத்த அரசியல்வாதிகளில் தொடங்கி பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!