News April 13, 2024
படைபலம்: ஈரான் Vs இஸ்ரேல் (2)

ஈரானிடம் 3,555 கவச வாகனங்களும், இஸ்ரேலிடம் 6,135 கவச வாகனங்களும் உள்ளன. ஈரான் கடற்படையிடம் 272 போர் கப்பல்களும், இஸ்ரேலிடம் 74 போர் கப்பல்களும் உள்ளன. ஈரானிடம் 19 நீர்மூழ்கி கப்பல்களும், இஸ்ரேலிடம் 6 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன. ஈரான் விமானப்படையிடம் 973 விமானங்களும், இஸ்ரேலிடம் 618 விமானங்களும் உள்ளன. ஈரான் விமானப்படையிடம் 519 ஹெலிகாப்டர்களும், இஸ்ரேலிடம் 128 ஹெலிகாப்டர்களும் உள்ளன.
Similar News
News January 24, 2026
புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

குடியரசு தினத்தையொட்டி தற்போது பள்ளி மாணவர்கள் தொடர் விடுமுறையில் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் ஆகிய தாலுகாவை சேர்ந்த மாணவர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, ஜன.28-ல் 3 தாலுகாவிலும் உள்ளூர் விடுமுறையாகும். இதனை ஈடுசெய்ய, பிப்.7-ம் தேதி பணிநாள் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
News January 24, 2026
இவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது

மகளிர் உரிமைத்தொகை ₹1000 பெறும் பெண்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, வேலைவாய்ப்பற்றோருக்கான மாத உதவித்தொகை திட்டத்தில் பயனாளியாக உள்ள பெண்கள், உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது. எனவே, இந்த இரு திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே உதவித்தொகை பெற முடியும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஏழை, எளிய குடும்ப பெண்கள், இதில் ஒன்றை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
News January 24, 2026
அதிமுகவாக மாறிவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனா

OPS தரப்பினர் திமுகவில் இணைந்து வரும் நிலையில், ‘திமுக உண்மையான அதிமுகவாக மாறிவிட்டது’ என்று ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். எந்த கட்சியில் இருந்து யார் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கும் கோழி பிடிக்கும் கட்சியாக திமுக மாறிவிட்டதாக சாடிய அவர், 2026 தேர்தலுக்காக எத்தனை கூட்டணிகள் உருவானாலும், விஜய் இல்லாத ஒரு கூட்டணியை மக்கள் ஒருபோதும் தேர்வு செய்யமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.


