News April 10, 2025
நீட் தேர்வு யார் நலனுக்காக கொண்டுவரப்பட்டது?

கோச்சிங் செண்டர்களின் நன்மைக்காக, சிலரின் சுயநலத்திற்காகவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய அவர், வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வு சாதகமாக உள்ளதாகவும், பல தரப்பட்ட சமூக பிரதிநிதித்துவத்தை இத்தேர்வு குறைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்யும் அரசின் போராட்டம் முடிவுக்கு வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 18, 2025
50% தொகுதிகளில் அதிமுக வலுவாக இருக்கிறது: IndiaToday

தமிழகத்தில் கடந்த 3 பேரவை தேர்தல்களின் ( 2011, 2016, 2021) முடிவுகளை அடிப்படையாக வைத்து, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 50% தொகுதிகளில் அதிமுக வலுவாக இருப்பதாக India Today கூறியுள்ளது. மிகவும் வலுவாக ADMK, 38, DMK 15 தொகுதிகளிலும், வலுவாக ADMK 81, DMK 62 தொகுதிகளிலும் உள்ளன. அதேபோல், பலவீனமாக ADMK 38, DMK 66 தொகுதிகளிலும், கணிசமாக வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகளில் ADMK 77, DMK 91 இடங்களிலும் உள்ளன.
News April 18, 2025
தெற்கு, மேற்கு மாவட்டங்களை குறிவைத்து BJP- ADMK கூட்டணி

கிராமப்புறங்களில் அதிமுக வலுவாக இருந்தாலும், நகர்ப்புற பகுதிகளில் ஒப்பீட்டளவில் பலவீனமாக உள்ளதாக India Today கூறியுள்ளது. தற்போது பாஜக உடன் கூட்டணி அமைத்ததன் மூலம் நகர்ப்புறங்களில் வாக்கு வங்கியை கூட்ட முடியும் என அதிமுக நம்புகிறது. குறிப்பாக, பாஜக கூட்டணியால், தென் மாவட்டங்களிலும், மேற்கு (கொங்கு) மாவட்டங்களிலும் அதிமுக கூட்டணி வலுவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
News April 18, 2025
ஹாரி பாட்டர் நாயகி, எலான் மஸ்க் கொண்டாட்டம்

திருநங்கைகளை பெண் என்ற சட்டப்பூர்வ வரையறைக்குள் சேர்க்க முடியாது என்ற இங்கிலாந்தின் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ‘ஹாரி பாட்டர்’ எழுத்தாளா் ஜே.கே.ரவுலிங் வரவேற்றுள்ளார். இங்கிலாந்து முழுவதும் உள்ள பெண்கள், சிறுமிகளின் உரிமைகளை கோர்ட் பாதுகாத்ததாகவும், இந்த தீர்ப்பை பார்த்து தான் பெருமைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு எலான் மஸ்க் ஃபயர் இமோஜிகளை பறக்கவிட்டு வரவேற்றுள்ளார்.