News August 9, 2024

வெளிநாடு வேலை செல்வோருக்கு…

image

வெளிநாடு வேலை தேடுவோருக்கு சைபர் க்ரைம் போலீஸ் அறிவுரை வழங்கியுள்ளது. வெளிநாடு வேலை என தொடர்பு கொள்ளும் ஏஜென்சிகள் நம்பகமானதுதானா? என்பதை https://emigrate.gov.in/#/emigrate/emigrant/list-of-ra-consolidate-report லிங்கில் உறுதி செய்ய கேட்டுள்ளது. போலி ஏஜென்சிகளை <-1>>https://emigrate.gov.in/#/emigrate/recruiting-agent/list-of-unregistered-ra-agencies-oragents<<>>இல் கண்டறியலாம் எனவும் கூறியுள்ளது.

Similar News

News November 28, 2025

திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட்

image

திருவள்ளூர், மாவட்டத்தில் நாளை மறுநாள் (நவ. 29) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் இந்த புயலுக்கு ‘டிட்வா’ என்ற பெயர் சூட்டப்பட உள்ளது

News November 28, 2025

13 கிமீ வேகத்தில் நகரும் ‘டிட்வா’ புயல்

image

<<18403328>> ‘டிட்வா’ புயல்<<>> கடந்த 6 மணி நேரத்தில், மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக IMD தெரிவித்துள்ளது. வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் இந்த புயல் சென்னைக்கு மேற்கு – தென்கிழக்கே 620 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ‘டிட்வா’ புயல் வருகிற புயல் வருகிற 30-ம் தேதி வட தமிழகம், மேற்கு ஆந்திர கடல் பகுதியை நெருங்கும் எனவும் IMD கணித்துள்ளது.

News November 28, 2025

BREAKING: விஜய் கட்சியில் ஓபிஎஸ் இணைகிறாரா?

image

செங்கோட்டையனைத் தொடர்ந்து OPS-ம் தவெகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரத்தில் டிச.15 வரை கெடு விதித்துள்ள அவர், தனிக்கட்சி தொடங்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது திடீர் திருப்பமாக, அவரும் தவெகவில் சேரவிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றன. மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

error: Content is protected !!