News April 22, 2025
ஹனிமூன் சென்றவர்களுக்கு… சோகம்!

கனவுகளுடன் கைப்பிடித்த இளம்தம்பதி, இனிய தொடக்கமாக காஷ்மீரின் பஹல்காமுக்கு ஹனிமூன் சென்றனர். காலம் முழுவதும் சேர்ந்திருக்க இணைந்த அவர்களை இப்பயணம் பிரிக்கும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். இருவரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தபோது நுழைந்த தீவிரவாதிகள், கணவனை சுட்டுக் கொன்றனர். கண்ணெதிரே கணவன் உயிர் போனதை பார்த்த மனைவி பேச்சற்று கிடக்கிறார்… இதயத்தை துளைக்கிறது இந்த போட்டோ.
Similar News
News December 9, 2025
செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி.. பரபரப்பு குற்றச்சாட்டு

அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ள செங்கோட்டையனின் அண்ணன் மகன் <<18510806>>கே.கே.செல்வம்<<>>, செங்கோட்டையன் மீது அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் அதிமுகவிற்கு துரோகம் செய்திருப்பதாகவும், இபிஎஸ் மீது தவறான குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதாகவும் சாடியுள்ளார். மேலும், தங்கள் குடும்பம் இல்லையென்றால், 2016 தேர்தலில் சித்தப்பா(செங்கோட்டையன்) தோல்வியை தழுவி இருப்பார் என்றும் கே.கே.செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
News December 9, 2025
சூழ்ச்சி செய்து எங்களை பிரித்தது ஜிகே மணி தான்!

பாமகவின் உள்கட்சி பிரச்னைகளுக்கு பாஜகவே காரணம் என திமுக கூறி வந்த நிலையில், குழப்பங்களுக்கு திமுக தான் காரணம் என அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சி கூட்டத்தில் பேசிய அவர், தான் தலைவரான அடுத்த நாளில் இருந்தே ஜிகே மணி சூழ்ச்சியை ஆரம்பித்துவிட்டதாக விமர்சித்துள்ளார். சூழ்ச்சி செய்து அப்பா பிள்ளை உறவை பிரித்தது அவர் தான் எனவும் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
News December 9, 2025
இனி போனில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க முடியாதா?

கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய ICC-யிடம் போட்ட டீலில் இருந்து Hotstar பின்வாங்க முடிவு செய்துள்ளது. 2024-ல் $3 பில்லியனுக்கு ஹாட்ஸ்டார் போட்ட இந்த டீல் 2027 தான் முடிவடைகிறது. ஆனால் கடுமையான நிதியிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி முன்னதாகவே ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற அந்நிறுவனம் நினைக்கிறதாம். 2026 WC நெருங்குவதால், சோனி, அமேசான், நெட்பிளிக்ஸிடம் ICC பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.


