News February 11, 2025
முதல்முறையாக ஒரு கிராம் தங்கம் ₹8 ஆயிரம்
ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதுவும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சவரனுக்கு ₹5,960 உயர்ந்துள்ளது. அதேபோல் முதல்முறையாக 1 கிராம் ₹8 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த மாதம் இதே தேதியில், ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராம் ₹7,315ஆக இருந்த நிலையில் இன்று ₹8,060ஆகவும், சவரன் ₹58,520ஆக இருந்த நிலையில் இன்று ₹64,480ஆகவும் உயர்ந்துள்ளது.
Similar News
News February 11, 2025
அடுத்த விடுமுறை எப்போ தெரியுமா?
தைப்பூசம் தினத்தையொட்டி இன்று அரசு பொது விடுமுறை அளித்துள்ளது. இந்த நேரத்தில் மக்கள் மனதில் வரும் முதல் கேள்வி, அடுத்த அரசு விடுமுறை எப்போ என்பதுதான். அதைத்தீர்த்து வைக்கதான் நாங்கள் இருக்கிறோம். அரசின் அட்டவணைப்படி, மார்ச் 30 & 31 ஆகிய தேதிகளில் முறையே உகாதி & ரம்ஜான் விடுமுறை வருகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகி போனது. பரவால்ல, ரம்ஜான் விடுமுறையை கொண்டாடுங்க.
News February 11, 2025
ஆபிசில் சீக்ரெட்டை ஷேர் பண்றீங்களா?
ஆபிசில் சீக்ரெட்டுகளை பகிர்வது சரியானது அல்ல என சைக்காலஜிஸ்டுகள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக, பர்சனல் லைஃப், நிதி நிலை குறித்து பேசவே கூடதாம். இதற்கு சில காரணங்களும் சொல்கிறார்கள். சம்பளம் குறித்து அதிகமாக பேசுவது பொறாமைக்கு வழிவகுக்கலாம். பர்சனல் விஷயங்களை பகிர்ந்தால், ஏதோ ஒரு மனஸ்தாபத்தால் பிரிய, நம்மை குறித்த சீக்ரெட் வெளியாகி விடுமோ என்ற தேவையற்ற பதற்றத்தையும் கொடுக்கும். உஷாரா இருங்க!
News February 11, 2025
மனிதர்களோடு விண்வெளிக்கு பறக்கும் ஈக்கள்
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில், மனிதர்களுடன் சேர்த்து ஈக்களையும் அனுப்ப டாடா நிறுவன விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். விண்வெளிப் பயணம் உயிரினங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும், விண்வெளிக்கு பறக்கும் போது அவை என்ன மாதிரியான உயிரியல் மாற்றங்கள் மற்றும் அழுத்தங்களைச் சந்திக்கின்றன என்பதையும் மதிப்பிட, ஈக்களை அனுப்ப உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.