News January 1, 2025
148 ஆண்டுகளில் முதல் முறையாக..

கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சுவாரஸ்யமான சாதனை பதிவாகியுள்ளது. 148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக கடந்த ஆண்டு 53 டெஸ்ட் போட்டிகளில் 50 போட்டிகள் முடிவு பெற்றுள்ளன. 3 போட்டிகள் டிராவில் முடிந்தது. இங்கிலாந்து 9 டெஸ்டிலும், இந்தியா, ஆஸி., நியூசி., தென்னாப்பிரிக்கா, இலங்கை தலா 8 டெஸ்டிலும், வங்கதேசம், அயர்லாந்து, பாக்., வெஸ்ட் இண்டீஸ் தலா 2 டெஸ்டிலும் வெற்றி பெற்றன.
Similar News
News November 28, 2025
திருப்பத்தூர் தேர்வர்களே தெரிந்து கொள்ளுங்கள் – தேதி மாற்றம்!

தமிழ்நாடு முழுவதும் ‘டிட்வா’ புயல் காரணமாக நாளை (நவ.29) நடைபெறவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு, டிசம்பர்.6-ம் தேதி சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்கம் இன்று (நவ.28) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு எழுதும் திருப்பத்தூர் மாணவர்கள் இந்த அறிவிப்பினை தெரிந்து கொள்ளுங்கள் உடனே மற்ற மாணவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 28, 2025
விஜய் முதல்வராவது உறுதி: செங்கோட்டையன்

தனது மூச்சு உள்ளவரை விஜய்க்கு விசுவாசமாக இருப்பேன் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுக, திமுக ஆகிய 2 ஆட்சிகளையும் மக்கள் விரும்பவில்லை என தெரிவித்த அவர், 2026-ல் விஜய் முதல்வராவார் எனவும் கூறியுள்ளார். மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காக ₹500 கோடி வருவாயை தூக்கி எறிந்துவிட்டு விஜய் வந்துள்ளதாகவும் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.
News November 28, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை… கலெக்டர்கள் அறிவிப்பு

புயல் எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை(நவ.28) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நாளை சனிக்கிழமை என்பதால் பள்ளிகளுக்கு வழக்கம்போல் விடுமுறை என்றும், தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


