News March 18, 2024
சிவகங்கை மக்களின் கவனத்திற்கு

சிவகங்கை மாவட்டத்தில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 18, 2026
சிவகங்கை: வேலை தேடுறீங்களா.? கலெக்டர் சொன்ன GOOD நியூஸ்

சிவகங்கை மாவட்டத்தில், வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வரும் 20.02.26 வெள்ளிக்கிழமை அன்று, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் வேலை தேடும் இளைஞர்கள் உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி நேற்று தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட பெண்கள் கவனத்திற்கு…!

சிவகங்கை மாவட்டம், வட்டார இயக்க மேலாண்மை அலகில், ஒப்பந்த வட்டார ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிட 30 வயதிற்குள்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி கட்டிடம் (DRDA Building) மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் நேரில் தெரிந்துகொள்ளலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.