News February 1, 2025
தொடர்ந்து 17ஆவது முறை.. இந்திய அணி சாதனை!

சொந்த மண்ணில் தொடர்ந்து 17 முறை T20 தொடரை வென்று, இந்திய அணி புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 4வது T20 போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி இந்த பெருமையை பெற்றுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ENG அணி, 5 T20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தத் தொடரை 3-1 என்ற கணக்கில், IND அணி கைப்பற்றியுள்ளது. கடைசி T20 போட்டி நாளை 7 PMக்கு வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
Similar News
News March 11, 2026
உலக சந்தையில் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று(11.03.2026) தாறுமாறாக உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) 118(₹10,844) உயர்ந்து $5,214 ஆக மாறியுள்ளது. மேலும், வெள்ளி 1 அவுன்ஸ் $5 உயர்ந்து $88-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், நம்மூர் சந்தையில் <<19342889>>நேற்று சவரனுக்கு ₹800<<>> உயர்ந்த நிலையில், இன்றும் பெரிய அளவில் உயர வாய்ப்புள்ளது.
News March 11, 2026
உடனே நடவடிக்கை: ஐகோர்ட் வார்னிங்

தமிழகத்தில் அரசு உத்தரவுக்கு விரோதமாக ஆர்டர்லி நடைமுறை பின்பற்றுவதாக புகார் வந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆர்டர்லி முறை ஒழிக்கப்படுவதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய ஐகோர்ட், இதை அமல்படுத்தவில்லை என்றால் அதிகாரிகள் மீது பணி விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
News March 11, 2026
6 வருடங்களுக்கு முன்.. இன்று என்ன நாள் தெரியுமா?

2020-ல் இதே நாளில்தான் கொரொனாவை பெருந்தொற்றாக (pandemic) உலக சுகாதார மையம் அறிவித்தது. 2019 டிசம்பர் மாதத்தில் சீனாவில் முதல் கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. அது, 2020 ஜனவரி மாதத்தில் உலகம் முழுவதும் பரவியது. பின்னர், 2020 மார்ச் மாதத்தில் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் நடந்த லாக்-டவுன், மாஸ்க், தடுப்பூசி, குவாரண்டைன் கதைகள் எல்லாம் உங்களுக்கே தெரியும்.


