News April 9, 2025
30 வயதை தாண்டிய ஆண்களுக்கு…

விறகு வெட்டும்போது, உடல் தசைகளுக்கு அதிக ரத்தவோட்டம் செல்வதால், டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் அளவு உயருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதிலென்ன செய்தி என்கிறீர்களா? ஆண்களுக்கு 30- 40 வயதில் ஆண் தன்மைக்கு காரணமாக டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைய தொடங்கும். இதனால் உடலுறவு செயல்பாடு, உடல் வலு குறையத் தொடங்கும். இதை தடுக்க எடை தூக்குதல் உள்ளிட்ட <<15206993>>சில வழிமுறைகளை<<>> பின்பற்ற ஆலோசனை தருகின்றனர்.
Similar News
News April 18, 2025
மீண்டும் தொடங்கும் ‘இந்தியன் 3 ’

கமலின் ‘இந்தியன் 2’ திரைப்படம் படுதோல்வி அடைந்ததால், ‘இந்தியன் 3 ’ கிடப்பில் போடப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், திடீர் திருப்பமாக Lyca நிறுவனம் அப்படத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட சுபாஸ்கரன் இன்று மதியம் சென்னை வரவுள்ளார். இந்த சந்திப்பின்போது அன்பு & அறிவு இயக்கத்தில் ₹250 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள ‘KH 237’ படம் குறித்தும் கமல் பேச உள்ளாராம்
News April 18, 2025
விண்வெளி துறைக்கு க்ரீன் சிக்னல்.. TN அரசு சாதிக்குமா?

‘தமிழ்நாடு விண்வெளி கொள்கை 2025’ திட்டத்திற்கு CM ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் ₹10,000 கோடி அளவிலான முதலீடுகளை ஈர்க்க உள்ளதாகவும், தமிழ்நாட்டில் விண்வெளித் துறைக்கு தகுதியான பட்டதாரிகளையும், ஊழியர்களையும் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
News April 18, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: வெகுளாமை. ▶குறள் எண்: 309 ▶குறள்: இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை ▶பொருள்: எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.