News August 7, 2024

வேலை தேடுவோருக்காக…

image

வேலை தேடுவோருக்கு அவர்களுக்கான வேலையைத் தேடி வழங்கும் தனியார் இணையதளங்கள் ஏராளமாக உள்ளன. அதுபோல, தமிழக அரசும் தனியாக இணையதளத்தை நடைமுறையில் வைத்துள்ளது. <>https://www.tnprivatejobs.tn.gov.in/Home/jobs<<>> என்ற இணையதளமே அந்த இணையதளமாகும். அந்த இணையதளத்திற்கு சென்று, உங்களுக்கு வேண்டிய இடம், நிறுவனம், ஊதியம், உங்கள் தகுதி உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். SHARE IT

Similar News

News January 3, 2026

திமுகவுக்கு தகுதி இல்லை: சீமான்

image

இலக்கு வைத்து மது விற்கும் திமுக அரசுக்கு, போதை ஒழிப்பு பற்றி பேச தகுதி இல்லை என சீமான் கூறியுள்ளார். திருச்சியில் பேசிய அவர், உங்களுக்கு தெரியாமல் போதை பொருள் நாட்டிற்குள் வருகிறது என்று சொல்ல வெட்கமாக இல்லையா என்றும், போதைக்கு அடிமையாகாமல் குழந்தைகளை பார்த்துக்கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு அதனை விற்பீர்களா என்றும் கேட்டுள்ளார். போதையை ஒழிப்பேன் என கூறுவதெல்லாம் வேடிக்கை எனவும் விமர்சித்துள்ளார்.

News January 3, 2026

காலையில் குறைந்து மாலையில் அதிகரித்த தங்கம் விலை

image

தங்கம் விலை கடந்த சில நாள்களாக கண்ணாமூச்சி காட்டி வருகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ₹480 குறைந்திருந்த நிலையில், மாலையில் ₹640 அதிகரித்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் ₹12,600-க்கும், 1 சவரன் தங்கம் ₹1,00,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News January 3, 2026

ஜனநாயகன் புக்கிங் குறைய காரணம் என்ன?

image

ஜனநாயகன் பட வசூலில் 75%-80% வரை விநியோகஸ்தர்கள் கேட்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அவர், TN-ல் 60% தியேட்டர்களில் JN வெளியிடவே விரும்புகின்றனர். ஆனால் கேரளாவில் 60% கேட்கும் நிலையில், TN-ல் 75% கேட்கிறார்கள். இதுதான் ஜனநாயகன் புக்கிங் குறைய காரணம். இதை விஜய்யின் காதுக்கு கொண்டு சென்றுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!