News May 19, 2024

உடற்பயிற்சியின்போது எடுக்க வேண்டிய உணவுகள்

image

உடற்பயிற்சிக்கு முன் சாப்பிடும் உணவுகள், ரத்த சர்க்கரை அளவை உயர்த்துவதாக இருக்க வேண்டும். காரணம், ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும்போது அடுத்த சில மணி நேரங்களுக்கு உடல் எனர்ஜிட்டிக்காக இருக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய், பப்பாளி, ஓட்ஸ், தயிர், கிரீன் டீ, நட்ஸ் சாப்பிடலாம். உடற்பயிற்சி செய்த பிறகு இளநீர், வாழைப்பழம் போன்றவற்றை உட்கொள்ளலாம். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

Similar News

News September 13, 2025

கூச்சல், கும்மாளம்: விஜய்யை அட்டாக் செய்த CM ஸ்டாலின்

image

விஜய்யின் சுற்றுப்பயணத்தில் திருச்சியே திண்டாடிபோயுள்ளது. இந்நிலையில், கொள்கையில்லா கூட்டத்தைச் சேர்த்து, கும்மாளம் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கம் திமுக அல்ல என CM ஸ்டாலின் விஜய்யை சாடியுள்ளார். திமுக முப்பெரும் விழாவுக்காக தொண்டர்களுக்கு அழைப்பு மடல் எழுதிய அவர், பழைய எதிரிகள்-புதிய எதிரிகள் என எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டு பார்க்கமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News September 13, 2025

உலக தடகள சாம்பியன்ஷிப்: மெடல் குவிக்குமா இந்தியா?

image

உலக தடகள சாம்பியன்ஷிப், ஜப்பானின் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. செப்.21 வரை நடைபெறும் இந்த தொடரில் 198 நாடுகளைச் சேர்ந்த 2,200 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவிலிருந்து நீரஜ் சோப்ரா, முரளி ஸ்ரீசங்கர், குல்வீர் சிங், அங்கிதா தியானி, பூஜா உள்பட 19 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். குறிப்பாக, ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. பதக்கங்கள் குவிக்க வாழ்த்துகள்!

News September 13, 2025

‘MLA திருட்டு’ பற்றி ராகுல் வாய் திறப்பாரா? ராமா ராவ் கேள்வி

image

வாக்கு திருட்டை பற்றி பேசும் ராகுல் காந்தி, தெலங்கானாவில் BRS கட்சியிலிருந்து காங்., கட்சி, MLA-க்களை திருடுவது பற்றி மௌனம் காப்பது ஏன் என கே.டி. ராமா ராவ் கேள்வி எழுப்பியுள்ளார். இது ராகுல் காந்தியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், மக்கள் பிரச்னைகளை காட்டிலும் MLA-க்களை திருடுவதில் தான் மாநில காங்., அதிக கவனம் செலுத்துவதாகவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!