News May 9, 2024
காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீர் ஒரு டம்ளர் குடித்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து, கழிவுகள் வெளியேறும். பின்னர், இரவு நீரில் ஊறவைத்த பாதாம் மற்றும், ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும் ஆப்பிள், தர்பூசணி, பப்பாளி போன்ற அமிலத்தன்மை குறைவான பழங்களை சாப்பிடலாம். கேரட், வெள்ளரி, முள்ளங்கி போன்ற கைகளை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான வைட்டமின் கிடைக்கும்.
Similar News
News August 22, 2025
பொது அறிவு வினா- விடை

கேள்விகள்:
1. சென்னை என்ற பெயர் யாரின் பெயரில் இருந்து வந்தது?
2. கதக் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
3. மனித உடலில் வியர்க்காத உறுப்பு?
4. வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் வாயுவின் சதவீதம் என்ன?
5. முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்ற இடம் எது?
சரியான பதில்களை கமெண்ட் பண்ணுங்க. பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.
News August 22, 2025
இன்று ஒரே நாளில் ₹2,000 உயர்ந்தது

<<17480599>>தங்கம் விலை இன்று(ஆக.22)<<>> சரிந்த போதிலும், வெள்ளி விலை விண்ணை தொட்டுள்ளது. சில்லறை விற்பனையில் கிராமுக்கு ₹2 உயர்ந்து ₹128-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹2,000 உயர்ந்து ₹1,28,000-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தை போலவே வெள்ளி நகைகளையும் இனி வங்கிகளில் அடகு வைக்கலாம் என RBI பரிந்துரை அளித்துள்ள நிலையில், வெள்ளி விலை மற்றும் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
News August 22, 2025
தோனி கேப்டன்சி.. ஒரே வரியில் சொன்ன டிராவிட்

தோனி கேப்டன்சியில், அவர் வீரர்களைக் கையாண்ட விதத்தை இப்போதும் நினைத்து பிரமிப்படைவதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டியில், ஒரு இளைஞராக இருந்து கேப்டன் பொறுப்பில் தன்னை தக்கவைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல என்றும் தோனிக்கு அவர் புகழாரம் சூட்டியுள்ளார். அதேபோல், வீரர்களுடன் உணர்வுப்பூர்வமாக இணையும் திறனே ரோஹித் சர்மாவின் கேப்டன்சிக்கு மிகப்பெரிய பலம் என்றும் கூறியுள்ளார்.