News April 3, 2024
கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

▶இளநீர் குடிப்பதால் உடல் உஷ்ணம் குறையும். சிறுநீர் பிரச்னையை சரி செய்ய உதவும்.
▶எலுமிச்சை சாறில் உள்ள வைட்டமின் சி, உங்கள் உடல் சூட்டைத் தணிக்கும்.
▶மோரில் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால், அதிக எனர்ஜி கிடைக்கும்.
▶நீர்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்கள் மற்றும் உணவுகளை சாப்பிட வேண்டும்.
▶சீரக தண்ணீர் குடிப்பது நல்லது.
▶மாங்காய், மாம்பழம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
Similar News
News April 19, 2025
GTஐ வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும் பட்லர்

DC அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடி வரும் ஜோஸ் பட்லர், அவரது GT அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்கிறார். 204 என்ற கடினமான இலக்கை துரத்திச் செல்லும் GT அணியின் கேப்டன் சுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், ஜோஸ் பட்லர் 42 பந்துகளில் 77 ரன்களை விளாசியுள்ளார். குறிப்பாக, 15ஆவது ஓவரின் முதல் 5 பந்துகளிலும் அவர் பவுண்டரி அடித்து அசர வைத்தார்.
News April 19, 2025
IPL: RR கேப்டன் மாற்றம்

இன்று மாலை நடைபெறவிருக்கும் IPL போட்டியில் LSG, RR அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்திருக்கிறார் LSG அணியின் கேப்டன் ரிஷப் பண்ட். RR கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் இப்போட்டியில் அவருக்கு பதிலாக ரியான் பராக் கேப்டனாக பொறுப்பேற்கிறார். பயிற்சியாளர் டிராவிடுக்கும் சஞ்சுவுக்கு மோதல் என்று கிசுகிசுக்கப்படும் வேளையில் கேப்டன் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
News April 19, 2025
தமிழகத்தில் வெப்பம் 40 டிகிரியை கடந்தது

சித்திரை மாதம் தொடங்கியிருக்கும் நிலையில், தமிழகத்தில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக, வேலூரில் இன்று வெப்பம் 40.5 டிகிரி செல்சியஸாக பதிவானது. அடுத்தபடியாக, திருத்தணி (39.6 டிகிரி), மதுரை (39.5 டிகிரி), கரூர் பரமத்தி (39 டிகிரி), திருச்சி (38.7 டிகிரி) என வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சம் வெப்பம் 36 டிகிரி செல்சியஸாக இருந்தது.