News October 16, 2025

பயணத்தின்போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

image

நாம் வாழும் வழக்கமான சூழலில் இருந்து சற்று மாற்றாக, மனதிற்கு இதமான பல்வேறு அனுபவங்களை கொடுக்க கூடியது பயணம். இந்த பயணத்தை நினைத்தபடியே முழுமையாக அனுபவிப்பவர்கள் வெகு சிலரே. ஏனென்றால், சூழலியல் பிரச்னைகள், உடல் உபாதைகள் காரணமாக பயணம் மனதை மாற்றிவிடும். எனவே, நீண்ட தூர பயணத்தில் நாம் தவிர்க்க வேண்டிய உணவுகளை மேலே swipe செய்து பாருங்கள். ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 16, 2025

ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்?

image

நமக்கு தினசரி கிடைக்கும் சத்துகள் நிறைந்த உணவு முட்டை தான். இதில் சுமார் 7 கிராம் புரோட்டீன், வைட்டமின் A, B, B12, ஃபோலேட், இரும்பு மற்றும் செலினியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. எனவே, ஒருவர் தினசரி 2 முதல் 3 முட்டைகள் (மஞ்சள் கருவுடன்) சாப்பிடலாம். பலரும் மஞ்சள் கருவை தவிர்க்கின்றனர். ஆனால் மஞ்சள் கருவில்தான் நிறைய ஊட்டச்சத்துகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்கள்.

News October 16, 2025

ரூபாய் மதிப்பை சந்தை தீர்மானிக்கும்: RBI கவர்னர்

image

இந்தியா, ஒரு குறிப்பிட்ட நாட்டின் கரன்சி மதிப்பை இலக்காக கொண்டு செயல்படவில்லை என்று RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் வர்த்தக கொள்கைகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, ரூபாய் மதிப்பு வீழ்ச்சிப் போக்கில் இருந்து வருகிறது. இந்நிலையில், ரூபாயின் மதிப்பை சந்தைகளே தீர்மானிக்க வேண்டும் என தான் நம்புவதாக சஞ்சய் மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார்.

News October 16, 2025

போட்டோவை வைத்து பாக்.,ஐ ட்ரோல் செய்த இந்தியா

image

கஜகஸ்தான் மேஜர் ஜெனரல் உடன் இந்திய ராணுவ தளபதி சந்தித்த போட்டோ வெளியானது முதல், இந்தியா பாக்.,ஐ மறைமுகமாக ட்ரோல் செய்ததாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். காரணம், அந்த போட்டோவுக்குள் இருக்கும் போட்டோ, 1971-ல் அப்போதைய பாக்., ராணுவ ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாஸி, இந்திய ராணுவத்திடம் 93,000 படைவீரர்களோடு சரணடைந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை குறிக்கிறது. இதன் பிறகே வங்கதேசம் நாடு உருவானது.

error: Content is protected !!