News March 27, 2025
வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள்

பதப்படுத்தப்பட்ட, அதிக சர்க்கரைக் கொண்ட உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், ரத்த ஓட்டத்தில் தேவைக்கு அதிகமான மெக்னீசியம், பொட்டாசியத்தின் அளவு அதிகரித்து இதய ஆரோக்யத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிக நார்ச்சத்து கொண்ட காய்கறிகளை பச்சையாக காலையில் சாப்பிடுவது வயிறு சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும்.
Similar News
News January 6, 2026
SPORTS 360°: குஜராத்தை வீழ்த்திய தமிழ்நாடு அணி

கடைசி ஆஷஸ் தொடரின் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 166/2 ரன்கள் சேர்த்திருந்தது. *தேசிய கைப்பந்து போட்டியில் தமிழக மகளிர் அணி ஜம்மு காஷ்மீரை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மலேசியா ஓபன் பேட்மிண்டன் இன்று தொடங்குகிறது. தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டியில் குஜராத்தை தமிழ்நாடு ஆடவர் அணி வீழ்த்தியது.
News January 6, 2026
அதிமுக, பாஜக கூட்டணியில் குழப்பம்: CPM

கூட்டணி ஆட்சியா? தனித்த ஆட்சியா? என்ற பிரச்னைக்கு, அதிமுகவும், பாஜகவும் முதலில் முடிவு காணவேண்டும் என CPM மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். அமித்ஷா கூட்டணி ஆட்சி அமையும் என பேசும் அதேசமயம், EPS தனித்த ஆட்சி என பேசி வருவதாக விமர்சித்துள்ளார். அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றும் பாஜக, தைரியமாக கூட்டணி ஆட்சி அமையும் என கூறி வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.
News January 6, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 6, மார்கழி 22 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்:9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: த்ரிதியை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்


