News September 29, 2025

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்

image

இதய நலம் நமது வாழ்வின் அடிப்படையான பலம். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நம் உடல்நலம் காக்கும் சில உணவுகளை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. அவை ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கின்றன. ரத்த நாளங்களில் கொழுப்புகள் சேராமல் தடுக்கின்றன. இதேபோல், உங்களுக்கு தெரிந்த உணவை கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News September 29, 2025

போரில் இந்தியா தோற்ற வரலாறு உண்டு: PCB தலைவர்

image

ஆசிய கோப்பையில் இந்தியா வென்றதை, விளையாட்டில் ஆபரேஷன் சிந்தூர் என <<17861414>>PM மோடி <<>>பாராட்டி பதிவிட்டு இருந்தார். இதை PCB தலைவர் மொஹ்சின் நக்வி கடுமையாக விமர்சித்துள்ளார். போர் உங்களது பெருமையின் அடையாளமாக இருந்தால், பாகிஸ்தான் கைகளில் இந்தியா தோற்ற பல வரலாறு உண்டு என அவர் தெரிவித்துள்ளார். மேலும், விளையாட்டில் போரை இழுப்பது, விளையாட்டின் உணர்வையே அவமானப்படுத்துவதாகவும் விமர்சித்துள்ளார்.

News September 29, 2025

புதன்கிழமை பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு அறிவிப்பு

image

அக்.2 விஜயதசமி அன்று அரசு, அரசு உதவிபெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தங்கள் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விவரங்கள் EMIS தளத்தில் பதிவிடப்படுவதை மேற்பார்வை செய்ய CEO-க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்.5-ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடர்கிறது.

News September 29, 2025

Cinema Roundup: சிம்பு படத்தில் நடிக்க சாய் பல்லவி மறுப்பு

image

*’யாத்திசை’ இயக்குநர் தரணி ராஜேந்திரனின் புதிய படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். *தன்னை பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என மஹிமா நம்பியார் எச்சரிக்கை. *சிம்புவின் அடுத்த படத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்துவிட்டதாக தகவல். *’GOAT’ நாயகி மீனாட்சி செளத்ரி இந்தி திரையுலகில் அறிமுகமாவதாக தகவல்.

error: Content is protected !!