News May 12, 2024
மனச்சோர்வை போக்கும் உணவுகள்…

நவீன வாழ்க்கை முறையின் பல நோய்களுக்கு முக்கிய காரணியாக இருப்பது மனச்சோர்வு. மனநலம் கெடுவதால் உடல்நலமும் கெட்டுப்போகிறது. ஆகவே துரித உணவுகளை தவிர்த்து வால்நட், தானியங்கள், கிரின் டீ, பால் பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் மனச்சோர்வில் இருந்து விடுபடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த உணவுகளை பின்பற்றி மனச்சோர்வில் இருந்து விடுபடுங்கள்.
Similar News
News September 18, 2025
போதைப்பொருள் நாடுகள் பட்டியலில் இந்தியா: டிரம்ப்

இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகள் போதைப்பொருள் உற்பத்தி மையங்களாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். போதைப்பொருள் மற்றும் அதற்கு தேவையான ரசாயனம் அதிகளவில் உற்பத்தி செய்வது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான், மெக்சிகோ, ஹைட்டி, கொலம்பியா, பெரு, பனாமா, பொலிவியா மற்றும் பர்மா போன்ற நாடுகள் இந்தப் பட்டியலில் உள்ளன.
News September 18, 2025
2 நாளில் 11 கொலைகள்

TN-ல் கடந்த 2 நாள்களில் மட்டும் 11 கொலைகள் அரங்கேறியுள்ளதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மயிலாடுதுறை (ஆணவக்கொலை), திருப்பத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, திருப்பூர், நெல்லை, விருதுநகர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 11 கொலைகள் நடந்துள்ளது. தென்மாவட்டங்களை தொடர்ந்து, தற்போது வட – மேற்கு மாவட்டங்களிலும் படுகொலைகள் அரங்கேற தொடங்கியுள்ளதாகவும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.
News September 18, 2025
அதிகமாக டீ, காபி குடிக்கிறீங்களா? எச்சரிக்கை!

ஒருநாளுக்கு 2 முறைக்கும் அதிகமாக டீ, காபி குடிப்பவர்களுக்கு பல பிரச்னைகள் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கிறாங்க. டீ-யில் உள்ள Tanin, காபியில் உள்ள கஃபைன் உடலை இரும்பு சத்தை உறிஞ்சவிடாமல் தடுக்கிறதாம். இதனால் ரத்தசோகை ஏற்படுகிறது. மேலும், High BP, அஜீரண கோளாறு, அல்சர், மூட்டு வலி, இருதய பிரச்னைகள் கூட வரும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். ஒருநாளுக்கு எத்தனை கப் டீ/காபி குடிப்பீங்க?