News April 5, 2025

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் டிரான்ஸ்பர்!

image

சென்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சதீஷ்குமாருக்கு மருந்து நிர்வாகத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு தர்பூசணியில் ரசாயன கலப்பு தொடர்பாக சதீஷ்குமார் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையான நிலையில், இன்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News September 19, 2025

13 பந்துகளில் அரைசதம்.. அதிரடி காட்டிய வீரர்

image

சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் விளாசிய 3-வது வீரர் என்ற சாதனையை நமீபியா வீரர் ஜேன் ஃபிரைலிங்க் படைத்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது டி20-ல், வெறும் 13 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். 31 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் விரட்டி 77 ரன்கள் எடுத்தார். நமீபியா 20 ஓவர்களில் 204 ரன்கள் குவித்த நிலையில், சேஸ் செய்த ஜிம்பாப்வே 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

News September 19, 2025

இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் அமெரிக்கா

image

ஈரான் மீதான பொருளாதாரத் தடையில், அந்நாட்டின் சாபஹார் துறைமுகத்துக்கு அளித்துவந்த விலக்கை நீக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியாக மாறும். ஐரோப்பா, ரஷ்யா, மத்திய ஆசிய நாடுகளுடன் வணிகத் தொடர்புக்காக சாபஹார் துறைமுகத்தை பெரும் பொருள் செலவில் இந்தியா மேம்படுத்தியது. அமெரிக்காவின் தடையால், இவ்வழியாக இந்தியாவின் வணிகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

News September 19, 2025

ரோபோ சங்கர் மறைவு வேதனையளிக்கிறது: தமிழிசை

image

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை ஜொலித்த நடிகர் ரோபோ சங்கரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக தமிழிசை செளந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். ரோபோ சங்கர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழிசை, திரைப்படக் கலைஞர்கள் தங்கள் கடுமையான பணிகளுக்கிடையில் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!