News April 13, 2025
சபரிமலையில் பக்தர்களுக்கு Food poison!

சபரிமலையில் தரிசனத்திற்காக சென்ற 10 பக்தர்கள் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்கள் சன்னிதான ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பம்பாவின் திரிவேணி மணப்புரத்திலுள்ள காபி லேண்ட் ஓட்டலில் அவர்கள் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பம்பா டூட்டி மாஜிஸ்திரேட் தலைமையிலான குழு அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தது.
Similar News
News April 14, 2025
காசியில் இவர்களை தகனம் செய்ய அனுமதியில்லை..!

புனித நகரமாக கருதப்படும் உத்தரப் பிரதேசத்தின் காசியில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்தால் அவர்கள் மோட்சம் அடைவார்கள் என்பது ஐதீகமாக உள்ளது. ஆனால், அங்கு எல்லோரையும் தகனம் செய்ய அனுமதி கிடையாது. சாதுக்கள், 12 வயதுக்குட்பட்டவர்கள், கர்ப்பிணிகள், பாம்புக் கடியால் இறந்தவர்கள், தோல் நோய் இருந்தவர்களின் உடல்களை காசியில் தகனம் செய்ய அனுமதிக்கப்படுவது இல்லையாம்.
News April 14, 2025
ஆணவக் கொலை: CM-க்கு அம்பேத்கர் பேரன் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என CM ஸ்டாலினுக்கு அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் வலியுறுத்தியுள்ளார். அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்ததற்காக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அவர், தமிழ்நாட்டில்தான் ஆணவக் கொலைகள் குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்டார். சமூக நீதி இருக்கும் வரை நம்மை யாராலும் பிரித்தாள முடியாது என்றும் பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்தார்.
News April 14, 2025
அம்பேத்கர் பெரும்புகழ் போற்றுவோம்: சீமான்

சாதிய இழிவைத் துடைத்தெறிய போராடாமல் இருப்பதைவிட செத்தொழிவதே மேலானது என போதித்த புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் பெரும் புகழ் போற்றுவோம் என சீமான் பதிவிட்டுள்ளார். அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி தனது X பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.