News November 18, 2024
பிளாஸ்டிக் கவரில் உணவு: உரிமம் ரத்தாகும்
தமிழகத்தில் சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவரை கடையில் விற்பனை செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உத்தரவை மீறி பிளாஸ்டிக் கவரில் உணவு பார்சல் செய்தால், கடையின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், கடைக்கு சீல் வைத்து ₹5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
Similar News
News November 20, 2024
நடுவானில் கோளாறு: உயிர் தப்பிய பயணிகள்
இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஜெய்ப்பூரில் இருந்து டேராடூன் நகருக்கு இண்டிகோ விமானம் நேற்று இரவு புறப்பட்டது. நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லி விமான நிலையத்தில் அவசர அவரசமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
News November 20, 2024
தாணுமாலய சாமி கோயிலில் ஐஸ்வர்யா சாமி தரிசனம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாணுமாலய சாமி கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். அவரை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். இதையடுத்து, கோவில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதி, கொன்றையடி சன்னதி, கோவில் சுற்றுப்பிரகாரங்களில் அவர் சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து ரசிகர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
News November 20, 2024
சர்வாதிகாரம் எப்போதும் வெற்றி பெறாது: உதயநிதி
சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். எல்.ஐ.சி இணையதளம் ஹிந்தியில் மாற்றப்பட்டதை விமர்சித்த அவர், ஹிந்தி உள்ளிட்ட எதையும் வலுக்கட்டாயமாக திணிப்பதன் மூலம் வளர்த்து விட முடியாது என்றார். ஓட்டுமொத்த நாட்டு மக்கள் பங்களிப்போடு செயல்படும் அந்நிறுவனத்தில், மத்திய அரசு குறுகிய எண்ணத்தில் செயல்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.