News September 26, 2025

விசிகவை தொடர்ந்து காங்கிரஸும் கடும் எதிர்ப்பு!

image

வள்ளிகும்மி கலைஞர் KKC பாலுவிற்கு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதை திரும்ப பெற வேண்டும் என விசிகவை தொடர்ந்து காங்., வலியுறுத்தியுள்ளது. வள்ளிகும்மியில் பிற சாதி ஆண்களை திருமணம் செய்யமாட்டோம் என இளம்பெண்களை பாலு உறுதிமொழி எடுக்க வைத்ததாக, சசிகாந்த் செந்தில் வீடியோ வெளியிட்டு பதிவிட்டுள்ளார். மேலும், சாதி பாகுபாடுகளை நிறுவனமயப்படுத்தும் வள்ளிகும்மியை அரசு ஆதரிக்க கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News September 26, 2025

இங்கே செல்போன்கள் வேலை செய்யாதாம்

image

பூமியின் சில இடங்களில் செல்போன்கள் செயல்படுவதில்லை. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தால் இந்த இடங்கள் இயற்பியல், காந்தவியல் பற்றிய நமது புரிதலுக்கு சவாலாக உள்ளன. அவை என்னென்ன இடங்கள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதுபோன்று உங்களுக்கு தெரிந்த விசித்திரமான இடத்தின் பெயரை கமெண்ட்ல சொல்லுங்க.

News September 26, 2025

தலைமுடி அடர்த்தியா வளர சீக்ரெட் எண்ணெய்

image

முடி அதிகமாக உதிர்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகுறீங்களா? இந்த எண்ணெயை ட்ரை பண்ணி பாருங்க. ➤ஆலிவ் ஆயிலை சூடாக்கி, ரோஸ்மேரி, கருஞ்சீரகம், வெந்தயம், பூண்டு மற்றும் கிராம்பு ஆகியவற்றைச் சேர்க்கவும் ➤5 – 7 நிமிடங்கள் வரை அடுப்பில் வையுங்கள் ➤எண்ணெயை வடிகட்டி ஜாடியில் வைத்துக்கொள்ளுங்கள் ➤வாரத்துக்கு 2 – 3 முறை Scalp-ல் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து தலைக்கு குளித்து வர முடி அடர்த்தியாக வளரும். SHARE.

News September 26, 2025

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக, பாமக, பாஜகவை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் CM ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். சித்தாமூர், சாலவாக்கம் ஒன்றியங்களை சேர்ந்த பாஜகவின் பி.அமீர்பாஷா, எஸ்.பாஸ்கர், ஏ.சண்முகம், அதிமுகவை சேர்ந்த எம்.அன்பழகன், ஜி.சசிகுமார், மணிகண்டன், பாமகவில் இருந்து ஏ.நரேஷ், வி.நாராயணன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் அடுத்தடுத்து திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.

error: Content is protected !!