News January 22, 2025

ஆபத்தான app-களை தடுக்க இதை FOLLOW பண்ணுங்க

image

மொபைலில் ஒரு app-ஐ இன்ஸ்டால் செய்யும்முன், அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவும். கூகுள் பிளேஸ்டோர், ஆப்ஸ்டோர், ஐஸ்டோர்களில் மட்டும் ஆப்களை டவுன்லோட் செய்யலாம். மற்ற ஸ்டோர்களில் app டவுன்லோட் செய்யும் முன், அது பாதுகாப்பானதா என்பதை கவனிக்கவும், ஆப்பின் ரேட்டிங், ரிவ்யூகளை படிக்கவும். வங்கி/ நிதி app-களை பொறுத்தவரையில், வங்கியின் இணையதளத்தில், நேரடியாக QR code-ஐ ஸ்கேன் செய்து டவுன்லோட் செய்யவும்.

Similar News

News November 2, 2025

நவம்பர் 2: வரலாற்றில் இன்று

image

*1834 – முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்த தொழிலாளர்கள் மொரீஷியஸ் சென்றனர்
*1903 – பரிதிமாற்கலைஞர் நினைவுநாள்.
*1936 – BBC நிறுவனம், தொலைக்காட்சி சேவையை தொடங்கியது.
*1965 – ஷாருக்கான் பிறந்தநாள்.
*1995 – நிவேதா தாமஸ் பிறந்தநாள்.

News November 2, 2025

காஞ்சனா 4-ல் இணைந்த பூஜா ஹெக்டே, நோரா ஃபடேஹி

image

காமெடி கலந்த ஹாரர் படங்களின் வரிசையில், ‘காஞ்சனா’ படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த படத்தின் 4-ம் பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகைகள் பூஜா ஹெக்டே, நோரா ஃபடேஹி ஆகிய இருவரும் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக நடித்துள்ளது. படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், 2026 கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News November 2, 2025

NDA ஆட்சியில் அதிக தனியார்மயமாக்கல்: பிரியங்கா

image

NDA ஆட்சியில் தனியார்மயமாக்கல் அதிகரித்துள்ளதாக MP பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பொதுத்துறையை, தனது நண்பர்களிடம் PM மோடி ஒப்படைத்துவிட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். நேரு, இந்திரா காந்தி ஆகியோரை விமர்சிக்கும் பாஜக தலைவர்கள், நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை குறித்து வாய் திறப்பதில்லை என்றும் கடுமையாக சாடியுள்ளார். பிஹார் தேர்தல் பரப்புரையில் இருதரப்பும் கடுமையாக தாக்கி பேசி வருகின்றன.

error: Content is protected !!