News February 25, 2025

பூக்களின் விலை 3 மடங்கு உயர்வு

image

மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பூக்களின் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், நேற்று கிலோ ₹400க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ, இன்று கிலோ ₹1,200க்கும், ₹300க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ, முல்லைப்பூ கிலோ ₹1,000க்கும் விற்பனையாகிறது. மேலும், சீசன் முடிந்துவிட்டதால் மல்லிகை பூ வரத்து குறைந்து காணப்படுவதாகவும் கூறுகின்றனர்.

Similar News

News February 25, 2025

தற்காலிக பணியாளர்களை நீக்க உத்தரவு

image

2020க்கு பிறகு தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஐகோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஊரக வளர்ச்சித் துறையின் மேல்முறையீட்டு வழக்கில், தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது குறித்து மார்ச் 17ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

News February 25, 2025

நீங்கள் சிகரெட் பிடிப்பவரா?

image

புகை பிடிப்பதால் கேன்சர் வரும் என சிகரெட் பெட்டிகளில் போட்டிருந்தாலும், நமது மக்கள் அதில் கவனம் செலுத்த மாட்டார்கள். இருப்பினும் புகை பிடிப்பது எலும்புகளையும் பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எளிமையாக உடையும் அளவிற்கு எலும்பின் வலிமையை புகைப்பழக்கம் குறைப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், எலும்பு உருவாவதற்கு காரணமான ஹார்மோன்களையும் அது சிதைப்பதாகவும் கூறுகின்றனர்.

News February 25, 2025

AUS-SA போட்டி 20 ஓவர்களாக குறைப்பு?

image

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் இன்று ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. போட்டி நடைபெறவுள்ள ராவல்பிண்டி மைதானம் அமைந்திருக்கும் பகுதியில், தொடர்ச்சியாக மழை பெய்வதால் இதுவரை டாஸ் போடப்படவில்லை. இரவு 7.20க்குள் மழை நிற்கும் பட்சத்தில், ஆட்டத்தை 20 ஓவர்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டி ரத்தானால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்.

error: Content is protected !!