News April 14, 2025
பூக்கள் விலை 2 மடங்கு உயர்வு

தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து போதிய அளவு இல்லாததால், சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது. 1 கிலோ மல்லிகை ரூ.500ஆகவும், ஐஸ் மல்லி, ஜாதி மல்லி, முல்லைப்பூ தலா ரூ.400ஆகவும், கனகாம்பரம் ரூ.800ஆகவும் உயர்ந்துள்ளது. சாமந்தி ரூ.240ஆகவும், சம்பங்கி ரூ.200ஆகவும், அரளிப்பூ ரூ.500ஆகவும் விலை அதிகரித்துள்ளது.
Similar News
News November 25, 2025
தலைமை சொன்னால் CM ஆக தொடர்வேன்: சித்தராமையா

கர்நாடகாவில் <<18373166>>உள்கட்சி பூசல்<<>> உச்சத்தை எட்டியுள்ள நிலையில், கட்சி தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என சித்தராமையா தெரிவித்துள்ளார். டிகே சிவகுமாரும் தலைமையின் முடிவுக்கு கட்டாயம் கட்டுப்பட வேண்டும் என்று கூறியுள்ள அவர், நான் முதல்வராக தொடர வேண்டும் என்று தலைமை முடிவெடுத்தால், தொடர்வேன் என்று குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து ராகுல் வந்த பிறகு, இதுபற்றி முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.
News November 25, 2025
ராசி பலன்கள் (25.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 25, 2025
புஸ்ஸி ஆனந்த், ஆதவிடம் CBI தீவிர விசாரணை

41 பேர் உயிரிழந்த கரூர் துயரம் தொடர்பாக தவெக தலைவர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட 5 பேரிடம் சிபிஐ தீவிர விசாரணை நடத்தியுள்ளது. சுமார் 10 மணி நேரம் நடந்த விசாரணையில் தவெக தலைவர்கள் அளித்த விளக்கத்தை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். அவர்களிடம் நாளையும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


