News February 16, 2025
பூக்கள் விலை பாதியாக சரிவு

முகூர்த்த நாள், விசேஷ நாள் இல்லாததால், சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை பாதியாக குறைந்துள்ளது. 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.3,600க்கு விற்கப்பட்ட நிலையில், அது ரூ.1,800ஆக சரிந்துள்ளது. ஐஸ் மல்லி ரூ.3,000இல் இருந்து ரூ.1,500ஆகவும், முல்லைப்பூ ரூ.2,500இல் இருந்து ரூ.1,200ஆகவும், ஜாதிமல்லி ரூ.2,500இல் இருந்து ரூ.1,200ஆகவும், கனகாம்பரம் பூ ரூ.1,000இல் இருந்து ரூ.600ஆகவும் வீழ்ச்சியடைந்துள்ளன.
Similar News
News September 12, 2025
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு: இந்தியா

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஐ.நா., சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. அந்நாட்டின் இறையாண்மை, ஒற்றுமையை மதிப்பதாக தெரிவித்த இந்தியா, தமிழர்களின் சமத்துவம், நீதி, அமைதி ஆகிய கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளது. முன்னதாக, 2015, ஜன.9-க்கு முன்பு அகதிகளாக இந்தியாவிற்குள் வந்த இலங்கை தமிழர்களை சட்டப்பூர்வமாக தங்க இந்தியா அனுமதி அளித்திருந்தது.
News September 12, 2025
உடல் வலுபெற இந்த யோகா காலையில் பண்ணுங்க!

*தரையில் நேராக நிற்கவும்.
*பிறகு ஒரு காலை மட்டும் முன்னால் வைத்து, மற்றொரு காலை பின்னால் வைக்கவும்.
*முன் காலின் பாதங்களை ஊன்றி, பின்காலின் விரல்களை மட்டும் ஊன்றி வைக்கவும்.
*2 கைகளையும் மேலே எழுப்பி ஒன்றிணையுங்கள்.
*இந்தநிலையில் 25- 30 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். இதேபோல, கால்களை மாற்றி செய்யவும்.
அனைத்து தசைகளும் வலுபெற இந்த வீரபத்ராசனம் உதவும்.Share it.
News September 12, 2025
பெரியாரை கற்றதால் திமுகவுக்கு ஆதரவு: திருமா

விசிகவை திமுக மெல்ல மெல்ல விழுங்கி விடும் என்று EPS சமீபத்தில் கூறியிருந்தார். இதனையடுத்து, திமுகவுடன் தான் ஏன் கூட்டணி வைத்தேன் என திருமா தொடர்ந்து விளக்கம் கொடுத்து வருகிறார். அந்த வகையில், பெரியாரை பயின்றதால் திமுகவை ஆதரிப்பதாக திருமா தெரிவித்துள்ளார். மேலும், 2 சீட்டுகளுக்காக திமுகவுடன் கூட்டணி வைத்தேன் என்று சொல்பவர்களால், அந்த சீட்டை கூட வாங்க முடியவில்லை என்றும் காட்டமாக கூறியுள்ளார்.