News August 19, 2025
11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகாவில் மழைத் தீவிரமடைந்துள்ளதால் KRS, கபினி அணைகளிலிருந்து 95,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு விரைவில் வரத்தொடங்கி இந்தாண்டில் 5-வது முறையாக நிரம்பும் வாய்ப்புள்ளது. இதனால் உபரிநீர் எந்த நேரத்திலும் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படலாம். இதனால் சேலம் உள்ளிட்ட காவிரி கரையோர 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Similar News
News August 19, 2025
சிபிஆர்-ஐ தேர்வு செய்ய உதவியவர்கள் யார்?

துணை ஜனாதிபதி பதவிக்கு சிபிஆர்-ஐ தேர்வு செய்ய இபிஎஸ், வெங்கய்யா நாயுடு உதவியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், 2024 லோக்சபா தேர்தலில் ஆந்திராவில் பாஜக-தெலுங்கு தேசம் கூட்டணி அமைய சிபிஆர் முக்கிய பங்கு ஆற்றியதாலும், நல்ல நட்பின் காரணமாகவும், அவரது பெயரை வெங்கய்யா நாயுடு பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. தமிழகம் வந்த அமித்ஷாவிடம் இபிஎஸ்-யும் பரிந்துரைத்ததால் தற்போது அவர் தேர்வானதாக கூறப்படுகிறது.
News August 19, 2025
திருமாவளவன் கருத்துக்கு சிபிஎம் எதிர்ப்பு

பணிநிரந்தரம் என்பது குப்பையை அள்ளுபவனே அள்ளட்டும் என்பதற்கு வலுசேர்ப்பதாக இருப்பதாக திருமாவளவன் தெரிவித்திருந்தார். இதுபற்றி பேசிய சிபிஎம்யை சேர்ந்த சண்முகம், 240 நாட்கள் பணிசெய்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே சட்டம் என்றும், அதனை நடைமுறைப்படுத்த தொழிற்சங்கங்கள் கூறுவதாக தெரிவித்தார். பணிபாதுகாப்புடன், வருமானமும் சேர்ந்தால் அடுத்த தலைமுறை இந்த பணியில் இருந்து விடுவிக்க உதவும் என்றார்.
News August 19, 2025
ஜெலென்ஸ்கி-புடின் சந்திப்பு: ஏற்பாடு செய்யும் டிரம்ப்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இது பற்றி டிரம்ப் வெளியிட்ட X பதிவில், புடினுடன், ஜெலன்ஸ்கி ஆலோசனை நடத்தும் வகையில் சந்திப்பு ஒன்று ஏற்படுத்தி தரவுள்ளதாகவும், இதற்கான இடம் பின்னர் தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இதன் பின் அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் பங்கேற்கும் வகையில் முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெறயிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.