News March 17, 2024
Flipkart மதிப்பு ₹41,000 கோடி குறைந்தது

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட்டின் சந்தை மதிப்பு சுமார் ₹41,000 கோடி குறைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு 40 பில்லியன் டாலராக இருந்த Flipkart-ன் சந்தை மதிப்பு தற்போது 35 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. சில எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய Flipkart நிறுவனம் தவறியதே இந்த இழப்புக்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Similar News
News October 20, 2025
Mass-ஆக தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினி!

எப்படா வருவாரு என காத்துக்கிடந்த ரசிகர்களுக்கு ரஜினி தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார். ஆண்டுதோறும் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டின் முன்பு, ரசிகர்கள் திரண்டு தீபாவளி வாழ்த்து பெற்று செல்வார்கள். இந்த ஆண்டும் காலை முதலே அவரது வீட்டு வாசலில் பெரிய ரசிகர்கள் பட்டாளம் குவிந்தது. வெயிட்டிங்கில் இருந்த ரசிகர்கள் முன் Mass-ஆக வெள்ளை வேட்டி சட்டையில் தோன்றி ரசிகர்களுக்கு வாழ்த்து கூறினார்.
News October 20, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 குறைந்தது

தீபாவளி நாளான இன்று(அக்.20) தங்கம் விலை சவரனுக்கு ₹640 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,920-க்கும், சவரன் ₹95,360-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹190-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,90,000-க்கும் விற்பனையாகிறது.
News October 20, 2025
ஆஸ்துமா பிரச்னையா? தீபாவளிக்கான சில டிப்ஸ்

தீபாவளியன்று காற்றுமாசு பல மடங்கு அதிகரிக்கும். இது ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இதை தவிர்க்க: *வெளியில் செல்லும் போது மாஸ்க் அவசியம் *இன்ஹேலரை அருகில் வைத்துக் கொள்ளவும் *முடிந்தளவு பட்டாசு வெடிப்பதை குறைப்பது நல்லது. *பாதிப்புள்ள குழந்தைகள் பெரிய வெடிகளை தவிர்த்து, பெற்றோரின் மேற்பார்வையில் சின்ன வெடிகளை வெடித்து மகிழலாம் *இந்த சூழ்நிலையில் வெந்நீர் பருகுவது நல்லது.