News March 17, 2024
Flipkart மதிப்பு ₹41,000 கோடி குறைந்தது

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட்டின் சந்தை மதிப்பு சுமார் ₹41,000 கோடி குறைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு 40 பில்லியன் டாலராக இருந்த Flipkart-ன் சந்தை மதிப்பு தற்போது 35 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. சில எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய Flipkart நிறுவனம் தவறியதே இந்த இழப்புக்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Similar News
News November 26, 2025
BREAKING: தமிழ்நாட்டிற்கு ‘ரெட் அலர்ட்’

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று(நவ.26) கனமழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. அதேபோல், நாளை(நவ.27) தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வரும் 29-ம் தேதி மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
News November 26, 2025
செங்கோட்டையனை திமுகவுக்கு அழைத்த அன்வர் ராஜா!

TN அரசியலில் மூத்த தலைவரான செங்கோட்டையன், திமுகவுக்கு வர வேண்டும் என அன்வர் ராஜா விருப்பம் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் நாளை தவெகவில் இணைய உள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக, <<18392822>>அமைச்சர் சேகர்பாபுவும்<<>> செங்கோட்டையனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனிடையே, நேற்று(நவ.25) மெளனம் சாதித்த செங்கோட்டையன், இன்று ஒருநாள் பொறுத்திருங்கள் எனக் கூறியுள்ளார்.
News November 26, 2025
யார் இந்த பொல்லான்?

ஈரோட்டில் மாவீரன் பொல்லான் சிலையை CM ஸ்டாலின் திறந்து வைத்தார். காவிரி கரையோர போர்(1801), சென்னிமலை போர்(1802), அரச்சலுார் போர்(1803) ஆகியவற்றில் தீரன் சின்னமலையின் வெற்றிக்கு பொல்லான்தான் முக்கிய காரணம். ஒற்றனாக ஆங்கிலப்படைக்குள் ஊடுருவிய பொல்லான் தந்திரங்களை அறிந்து, சின்னமலையை வெற்றிபெற வைத்தார். சிறந்த வாள்வீச்சு வீரராக திகழ்ந்த பொல்லான், 1805-ல் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


