News October 9, 2025
FLASH: கோல்ட்ரிப் சிரப் வழக்கில் மேலும் இருவர் கைது!

21 குழந்தைகள் உயிரை குடித்த கோல்ட்ரிப் இருமல் சிரப் வழக்கில் மேலும் இருவரை ம.பி., போலீசார் கைது செய்துள்ளனர். காலையில், ஸ்ரீசென் பார்மா நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்ட நிலையில், TN போலீசார் உதவியுடன் காஞ்சிபுரத்தில் ஸ்ரீசென் பார்மா நிறுவன மேலாளர் ஜெயராமன், ஆய்வக உதவியாளர் மகேஸ்வரி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News October 9, 2025
விஷமாக மாறிய மருந்து.. குழந்தையை கொன்ற துயரம்

ம.பி.,யில் இருமல் சிரப் குடித்த திவ்யான்ஷ் (6) உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல் காரணமாக குழந்தையின் தந்தை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, டாக்டர் பரிந்துரைத்த இருமல் சிரப்பை நாளொன்றுக்கு 4 முறை கொடுத்துள்ளார். மருந்து விஷமாக மாறி பிஞ்சு உயிர் பலியாகியுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பட்டியலில், இக்குழந்தை பெயர் இல்லாததால், அரசின் ₹4 லட்சம் நிவாரணமும் கிடைக்கவில்லை.
News October 9, 2025
கரூர் துயரம்: சற்றுமுன் அதிரடியாக கைது

கரூர் துயர சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை சூடுபிடித்துள்ளது. சம்பவத்தின்போது ஆம்புலன்ஸை வழிமறித்து டிரைவரை தாக்கியதாக தவெக சேலம் மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகனை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் 2 நாள்கள் விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
News October 9, 2025
கிரிக்கெட் வாரியங்களின் சொத்து மதிப்பு.. நம்பர் 1 யார்?

கிரிக்கெட் தற்போது விளையாட்டு என்பதை தாண்டி, , மிகப்பெரிய வணிகமாக வளர்ந்துள்ளது. 2025-26-ம் ஆண்டில் கிரிக்கெட் வாரியங்களின் மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா? ஒவ்வொரு கிரிக்கெட் வாரியத்தின் மதிப்பை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்தியாவுக்கு அடுத்து, உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் அணி எது? கமெண்ட்ல சொல்லுங்க.