News October 27, 2025
FLASH: மீண்டும் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்

கடந்த வெள்ளிக்கிழமை சரிவுடன் நிறைவடைந்த இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று(அக்.27) ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 245 புள்ளிகள் உயர்ந்து 84,457 புள்ளிகளிலும், நிஃப்டி 62 புள்ளிகள் உயர்ந்து 25,858 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Kotak Mahindra, HDFC Bank, ICICI Bank, Tata Steel உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் உள்ளதால் அவற்றில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Similar News
News October 27, 2025
செந்தில் பாலாஜி மீது அதிருப்தி.. திமுகவில் சலசலப்பு

திமுக கொங்கு மண்டல பொறுப்பாளராக உள்ள செந்தில் பாலாஜி மீது அக்கட்சியின் Ex அமைச்சர் NKKP ராஜா சீறியுள்ளது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில், செந்தில் பாலாஜியின் பிறந்தநாள் கொண்டாட்ட போஸ்டர்களில் கருணாநிதி, ஸ்டாலின் படங்கள் இல்லாமல் இருந்ததே அதற்கு காரணம். தேர்தல் சீட்டுக்காக திமுகவின் கம்பீரத்தை சிதைத்துவிடாதீர்கள் என நிர்வாகிகளுக்கு அட்வைஸ் கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
News October 27, 2025
விலை கிடுகிடுவென உயர்ந்தது

‘மொன்தா’ புயல் எதிரொலியால் சென்னை, கடலூர், நாகை, ராமநாதபுரம் மீன்பிடி துறைமுகங்களில் மீன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தீபாவளிக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள் புயல் எச்சரிக்கை காரணமாக கரை திரும்பினர். இதனால், மீன் வரத்து குறைந்து சென்னையில் 1 கிலோ வஞ்சிரம் ₹1,300 – ₹1,400, பாறை ₹400 – ₹500, சீலா ₹600 -₹700, இறால் ₹400 – ₹500, நண்டு ₹300 – ₹400, சங்கரா ₹300 – ₹400-க்கு விற்பனையாகிறது.
News October 27, 2025
FLASH: ஷ்ரேயஸுக்கு ICU-வில் சிகிச்சை

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷ்ரேயஸ் ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிட்னியில் நேற்று முன்தினம் நடைபெற்ற IND Vs AUS இடையேயான கடைசி ஒருநாள் போட்டியின்போது, ஆஸி., வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை, ஷ்ரேயஸ் நீண்ட தூரம் பின்னோக்கி ஓடி கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இந்த முயற்சியில் அவரது இடது விலா எலும்பில் காயம் ஏற்பட்டு உட்புற ரத்தக் கசிவு ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


