News September 24, 2025
கடும் சரிவுடன் நிறைவடைந்த பங்குச்சந்தைகள்

இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Sensex 372 புள்ளிகள் சரிந்து 81,729 ஆகவும், நிஃப்டி 110 புள்ளிகள் சரிந்து 25,061 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. அதானி பவர், டாடா மோட்டார்ஸ், கோத்ரேஜ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. அதேநேரம் JSW, சிட்டி யூனியன் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
Similar News
News September 24, 2025
CBSE பொதுத்தேர்வு தேதி வெளியானது

10, 12-ம் வகுப்பு CBSE மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்.17-ல் தொடங்கி ஜூலை 15-ல் முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்வை, இந்தியா உள்பட 26 நாடுகளில் இருந்து 45 லட்சம் மாணவர்கள் எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு தேர்வும் நடந்த 12-வது நாளில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும்.
News September 24, 2025
மாதம் ₹2,000 உதவித்தொகை.. அமைச்சர் புது அப்டேட்

‘அன்புக் கரங்கள்’ திட்டத்தில் ₹2,000 உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க செயலி உருவாக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைக்கும் வகையில் அக்குழந்தைகளுக்கு 18 வயது வரையில் மாதந்தோறும் ₹2,000 வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் கடந்த 15-ம் தேதி தொடங்கி வைத்தார். தாய், தந்தை (அ) தாய் (அ) தந்தை இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
News September 24, 2025
தேவர் முதல் விஜய் வரை.. தமிழக அரசியலில் முருகன்

வட இந்தியாவில் ராமர், விநாயகர், துர்கா, காளி ஆகிய தெய்வங்கள் அரசியலாக்கப்படுகிறது. தென்னிந்தியாவை பொறுத்தவரை வெங்கடாஜலபதி, ஐயப்பன் ஆகியோர் அரசியலுக்குள் உள்ளனர். இந்த பட்டியலில் ‘முருகர்’, தமிழக அரசியல் களத்தில் உள்ளார் என்றே கூறலாம். இந்நிலையில், தமிழகத்தில் முருகனை முன்வைத்து மேற்கொண்ட அரசியல் நிகழ்வுகள் என்னென்ன என்பதை பாருங்கள். பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, உங்கள் கருத்தையும் சொல்லுங்க