News September 5, 2025
FLASH: ரோடு ஷோ நடத்திய செங்கோட்டையன்

கோபியில் இன்னும் சற்று நேரத்தில், செய்தியாளர்களை சந்திக்க உள்ள செங்கோட்டையன் பிரமாண்ட ரோடு ஷோவை நடத்தினார். அவரது வீட்டில் இருந்து கட்சி அலுவலகம் வரை, சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆதரவாளர்கள் வைத்துள்ள பேனர்களில் EPS படம் இடம் பெறவில்லை. செங்கோட்டையன் என்ன பேசப்போகிறார் என்பதற்காக ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருக்கிறது.
Similar News
News September 5, 2025
வெள்ளி பதக்கத்துடன் 386 பேருக்கு நல்லாசிரியர் விருது

சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், 386 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை DCM உதயநிதி வழங்கினார். இதில் விருது பெறுபவர்களுக்கு ₹10,000 ரொக்கம், வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதிக மாணவர் சேர்க்கை, கற்பித்தலில் புதுமை, பள்ளிகளின் நலன் சார்ந்து சிறந்த பங்களிப்பை வழங்குதல் உள்ளிட்டவை விருதுக்கான அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
News September 5, 2025
மும்முனை மகிழ்ச்சி: உலக சமோசா தினம்

சமோசாவின் தனித்துவத்தையும், வரலாற்றையும் போற்றும் விதமாக உலக சமோசா தினம் கொண்டாடப்படுகிறது. மத்திய ஆசியாவில் தோன்றியதாக கூறப்பட்டாலும், இன்று இந்தியாவின் மிகவும் ஃபேவரைட் ஸ்நாக்ஸ் சமோசாதான். பொன்னிற முனைகளுடன், வெளியில் மொறு மொறுப்பாக இருந்தாலும், உருளைக்கிழங்கு, பட்டாணி கலவையான மசாலா நாவுக்கு விருந்து தரும். மாலையில் ஒரு கப் டீயுடன், 2 சமோசா போதும்.. எந்த டென்ஷனும் ஓடி போய்விடும். SHARE IT.
News September 5, 2025
சூர்யா படத்தை சுற்றும் பஞ்சாயத்து?

சூர்யா-R.J.பாலாஜி கூட்டணியின் ‘கருப்பு’ ஷூட்டிங் முடிந்து தீபாவளிக்கு வருவதாக இருந்தது. இதற்கான எடிட்டிங் பணிகளின் போது, சில காட்சிகள் திருப்தியாக இல்லை என்பதால் ரீ-ஷூட் செய்ய 15 நாட்கள் வேண்டும் என கூறியுள்ளாராம் பாலாஜி. ஆனால், சூர்யாவோ தெலுங்கு படத்தில் பிஸியாக இருக்க, தயாரிப்பு தரப்போ பட்ஜெட்டில் கறாராக இருக்க, செய்வதறியாமல் பாலாஜி தவிப்பதாக கூறப்படுகிறது. படம் தீபாவளிக்கு வந்துடுமா?