News October 17, 2025

FLASH: ஆப்கன் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

image

ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் 5.66 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாலை 5.30 மணி அளவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் தெருக்களிலும், சாலைகளிலும் குவிந்தனர். இதன் சேத விவரம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கமானது ஜம்மு காஷ்மீர் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

Similar News

News October 17, 2025

தங்கம் விலை தலைகீழாக மாறுகிறது

image

இப்போது ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை, பின்னர் 30 முதல் 35% வரை குறையும் என்கிறார் முதலீட்டு நிபுணர் அமித் கோயல். வரலாற்றில் 2 முறை மட்டுமே தங்கம் விலை இம்மாதிரி உச்சம் தொட்டதாகவும். அதன்பின் பெரும் சரிவு கண்டதாகவும் கூறும் அவர், இம்முறையும் உச்சம் தொட்டு, பின் 1 சவரன் ₹62,161 வரையும், வெள்ளி 1 கிலோ ₹77,450 வரையும் குறையும் எனக் கணித்துள்ளார். ஆகவே தங்கம் வாங்க அவசரப்பட வேண்டாம் என்கிறார்.

News October 17, 2025

குழந்தைகளுக்கு வயிற்றில் புழு தொல்லையா?

image

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வாய்விடங்கம் 25 கிராம், மிளகு 3-5 கிராம் ஆகியவற்றை குப்பைமேனி சாறுடன் கலந்து வெயிலில் வைக்கவும். சாறு வற்றியவுடன், இதை பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். அரை டீஸ்பூன் பொடியை எடுத்து தொடர்ந்து 3 நாள்கள் குழந்தைகளுக்கு கொடுத்துவர வயிறு சுத்தமாகும். 10 கிலோ எடையுள்ள குழந்தைகளுக்கு கால் டீஸ்பூன் கொடுத்தால் போதும் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.

News October 17, 2025

ஹரிஷ் கல்யாணுக்கு கை கொடுத்ததா டீசல்?

image

வட சென்னையில் கச்சா ஆயிலை கடத்துவதை மையமாக கொண்டு ‘டீசல்’ படம் உருவாகியுள்ளது. ஹரிஷ் கல்யாண் ‘டீசல்’ படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாற முயற்சித்துள்ளார். அதுல்யாவின் லவ் போர்ஷன் படத்துக்கு கை கொடுக்காமல், சிக்கலாக மாறியுள்ளது. திபு நினன் தாமஸின் இசை படத்துக்கு ஒரு பிளஸ்ஸாக அமைந்துள்ளது. ரசிகர்களை கவரும் விதமான காட்சிகளை படத்தில் அதிகம் வைத்திருந்தால் இந்த டீசல் மிகப்பெரிய படமாக மாறியிருக்கும்.

error: Content is protected !!