News July 6, 2025

FLASH: கி.வீரமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு

image

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி(91) சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாந்தி, மயக்கம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News July 6, 2025

அடுத்த இடத்துக்கு முன்னேறும் மணிகண்டன்?

image

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகர்களில் ஒருவரான மணிகண்டன், அடுத்ததாக பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம். இதனை நீலம் புரடொக்‌ஷன் தயாரிக்கிறது. இது நடுத்தர மக்கள் மத்தியில் காணப்படும் சாதிய அரசியலை மையமாகக் கொண்டு உருவாகிறதாம். பெரும்பாலும் நடுத்தர வர்க்க ஃபேமிலி ரோலில் நடித்துவந்த மணிகண்டன், அந்த இடத்தைவிட்டு வெளியேறுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News July 6, 2025

₹1,000 உரிமைத்தொகை… நாளை முதல் விண்ணப்பம்..!

image

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கத்திற்கான விண்ணப்ப படிவம் நாளை (ஜூலை 7) முதல் வீடு, வீடாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தன்னார்வலர்கள் மூலம் வீட்டிற்கே சென்று படிவங்களை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. படிவங்களை நிரப்பி தேவையான ஆவணங்களுடன், ஜூலை 15-ம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களின் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளே, ரெடியா..!

News July 6, 2025

நான் ஒரு தனி மனிதன்.. அண்ணாமலை பேச்சில் சூசகம்

image

அதிமுக – பாஜக கூட்டணிக்குள் முரண்பட்ட கருத்து நிலவி வரும் சூழலில், அண்ணாமலையின் பேட்டி பேசுபொருளாகியுள்ளது. பாஜகவின் கூட்டணி ஆட்சி தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘நான் ஒரு தனி மனிதன், யாருடைய கருத்துக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்லை’ என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகிவிட்டாரா என நெட்டிசன்கள் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர். உண்மை என்னவாக இருக்கும்?

error: Content is protected !!