News September 19, 2025
FLASH: சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள்!

நேற்று ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று(செப்.19) சரிவுடன் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சென்செக்ஸ் 128 புள்ளிகள் சரிந்து 82,892 புள்ளிகளிலும், நிஃப்டி 25 புள்ளிகள் சரிந்து 25,393 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Titan, TCS, ICICI Bank, Hindalco, TATA Cons. Prod நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக சரிந்துள்ளன.
Similar News
News September 19, 2025
அதிக வருமான வரி கட்டும் நடிகர்கள்.. டாப்பில் விஜய்!

ஒவ்வொரு குடிமகனும் ஆண்டு வருமானத்திற்கேற்ப வரி கட்டுவது அவர்களின் கடமை. அப்படி திரையுலகில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகர்களில் அதிகம் வரி செலுத்துபவர்கள் யார் என தெரியுமா? அறிந்து கொள்ள கொடுக்கப்பட்டுள்ள போட்டோஸை Swipe செய்யவும். இத்தகவல் நன்றாக இருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.
News September 19, 2025
BREAKING: விஜய் வீட்டில் வெடிகுண்டா? அதிரடி சோதனை

சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர்கள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். விஜய், வீட்டின் மொட்டை மாடியில் இளைஞர் ஒருவர் பதுங்கியிருந்த நிலையில், அவர் வீட்டில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, ‘Y’ பிரிவு பாதுகாவலர்களின் பரிந்துரையின் அடிப்படையில் தற்போது சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.
News September 19, 2025
T20-ல் இன்று வரலாறு படைக்கவுள்ள இந்தியா!

T20-ல் இந்திய அணி, இன்று தனது 250-வது போட்டியில் விளையாடவுள்ளது. இதுவரை 249 போட்டிகளில் விளையாடியுள்ள, இந்திய அணி 171-ல் வெற்றியும், 71-ல் தோல்வியும் அடைந்துள்ளது (6 போட்டியில் முடிவில்லை, ஒரு டிரா). இதில் 2 WC (2007, 2024) வெற்றியும் அடங்கும். டிசம்பர் 1, 2006-ம் ஆண்டு சேவாக் தலைமையில் முதல் T20-ல் இந்திய அணி விளையாடியது. அதிக T20 போட்டிகளில் விளையாடிய அணியாக பாகிஸ்தான்(275 போட்டிகள்) உள்ளது.