News October 25, 2024
FLASH: தங்கம் விலை மீண்டும் உயர்வு

நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹440 குறைந்த நிலையில், இன்று மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 உயர்ந்து ஒரு சவரன் ₹58,360க்கும், கிராமுக்கு ₹10 உயர்ந்து ஒரு கிராம் ₹7,295க்கும் விற்கப்படுகிறது. பண்டிகை காலம், சுப முகூர்த்த காலங்கள் என்பதால் தங்கம் விலை குறையும் என காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
Similar News
News January 12, 2026
18 வருஷ வெயிட்டிங் ஓவர்! மீண்டும் டபுள் டக்கர் பஸ்!

1970-ல் கம்பீரமாக வலம் வந்த டபுள் டக்கர் பஸ்கள் சென்னையின் அடையாளமாகவே இருந்தன! பஸ்சின் மேல்தளத்தில் வேடிக்கை பார்த்து பயணிக்கவே, சுற்றுலா பயணிகள் சென்னைக்கு படையெடுத்த காலமது! ஆனால், அதிக பராமரிப்பு செலவு காரணமாக 2008-ல் சேவை நிறுத்தப்பட்டது. 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று டபுள் டக்கர் பஸ் சேவையை CM ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள நிலையில், இது பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் என நம்பப்படுகிறது.
News January 12, 2026
காங்கிரஸாரின் கருத்தை கேட்க முடியாது: அமைச்சர்

திமுக கூட்டணியில் காங்., மதில் மேல் பூனையாக இருப்பதாக பேசப்பட்டுவருகிறது. இந்நிலையில், காங்கிரஸுக்கு சாதகமான தொகுதிகளை ஒதுக்கிவிட்டதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். காங்கிரஸில் ஆயிரம் பேர் ஆயிரத்தெட்டு கருத்துகளை சொல்வார்கள்; அதையெல்லாம் கேட்க முடியாது எனவும் கூறியுள்ளார். மேலும், கூட்டணி நலன் குறித்து காங்கிரஸ் தலைவருடன் பேசி திமுக தலைவர் முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார்.
News January 12, 2026
தங்கம், வெள்ளி.. அதிரடியாக ₹12,000 விலை மாற்றம்

<<18833327>>தங்கம் போலவே<<>> வெள்ளி விலையும் இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சில்லறை விலையில் கிராமுக்கு ₹12 உயர்ந்து ₹287-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹12,000 உயர்ந்து ₹2,87,000-க்கும் விற்பனையாகிறது. பொங்கல் பண்டிகைக்கு சீர் பொருள்கள் வாங்க நினைத்தவர்கள் தங்கம், வெள்ளி விலை உயர்வால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


