News October 24, 2025
FLASH: தங்கம் விலை தலைகீழாக மாறியது

ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறதே என அவசர அவசரமாக தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இந்த வாரம் பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. 22 காரட் தங்கம் ஒரே வாரத்தில் சவரனுக்கு ₹6,400 குறைந்துள்ளது. அக்.17-ல் சவரன் ₹97,600 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு <<18091994>>தொடர் சரிவிலேயே<<>> உள்ளது. வெள்ளி விலையும் 1 வாரத்தில் கிலோ ₹33,000 வரை சரிந்துள்ளது. அதனால், முதலீடு செய்பவர்கள் சற்று பொறுமை காப்பது நல்லது.
Similar News
News October 25, 2025
தமிழ் நடிகர் காலமானார்.. கண்ணீருடன் இறுதி அஞ்சலி

நடிகை மனோரமாவின் ஒரே மகனும் நடிகருமான பூபதி(70) சென்னையில் நேற்று காலமானார். அம்மா பயன்படுத்திய கட்டிலிலேயே அவரது உயிர் பிரிந்தது பெரும் சோகம். தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்ட உடலுக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, பூபதி உடலுக்கு குடும்பத்தினர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான பூபதி பல படங்களில் நடித்திருந்தார். RIP
News October 25, 2025
செல்வப்பெருந்தகையின் பேச்சு வருத்தம் அளிக்கிறது: அமைச்சர்

செம்பரம்பாக்கம் ஏரியை அத்தொகுதியின் MLA ஆன தன்னிடம் சொல்லாமல் திறந்ததற்காக நீர்வளத்துறை அதிகாரிகளை <<18077962>>செல்வப்பெருந்தகை<<>> சாடினார். இதுதொடர்பாக பேசிய அமைச்சர் துரைமுருகன், செல்வப்பெருந்தகை போன்ற கட்சி தலைவர்கள் கடுமையான பேசியது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். உண்மையை தெரிந்து கொண்டு அவர் பேச வேண்டும் எனவும், சின்ன சின்ன நீர் திறப்புகளுக்கு எல்லாம் MLA-வை கூப்பிடமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
News October 25, 2025
இந்தியா அழுத்தத்திற்கு பணியாது: பியூஷ் கோயல்

அழுத்தத்திற்கு பணிந்து அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் அணுகுமுறை நீண்டகால தொலைநோக்கு பார்வையை கொண்டது எனவும் கூறியுள்ளார். மேலும், அமெரிக்க வரிவிதிப்பை கடந்து செயலாற்றுவது எப்படி என யோசித்து வருவதாகவும், புதிய சந்தைகளை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


