News October 25, 2025
FLASH: உலக சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கண்ணாமூச்சி ஆடி வருகிறது. நேற்று(அக்.24) காலை வர்த்தகத்தில் ஏற்றத்தில் இருந்த தங்கம் மாலையில் சுமார் 75 டாலர்கள் (₹6,586) சரிந்தது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) 16 டாலர்கள் சரிந்து $4,113 ஆக நீடிக்கிறது. இதனால், இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் பிரதிபலிக்கும் என கூறப்படுகிறது. கடந்த 7 நாள்களில் நம்மூரில் தங்கம் விலை சவரனுக்கு ₹6,400 குறைந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 25, 2025
இது புது Wide ball விதி.. IND vs AUS மேட்ச்சில் கவனிச்சீங்களா!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ODI தொடரில், புது Wide ball விதியை ICC சோதித்து வருகிறது. இதன்படி, தற்போது பேட்ஸ்மேனுக்கு Leg side-ல் ஒரு Guideline கொடுக்கப்பட்டுள்ளது. Leg side பந்து அந்த Guideline-க்குள் சென்றால், அது Wide ball-ஆக கருதப்படாது. முந்தைய விதியில் பந்து பேட்ஸ்மேனுக்கு Leg side சென்றாலே, wide கொடுக்கப்படும். இது பவுலர்களுக்கு கொஞ்சம் Relief கொடுக்கும் என கூறப்படுகிறது.
News October 25, 2025
FLASH: அதிமுக MP தம்பிதுரை ஹாஸ்பிடலில் அனுமதி

அதிமுக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான தம்பிதுரை(78) உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை திடீரென அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினர் ஹாஸ்பிடலில் சேர்த்துள்ளனர். டாக்டர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வரும் நிலையில், சிகிச்சைகள் தொடர்பாக விரைவில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 25, 2025
தேவர் ஜெயந்தி விழாவில் துணை ஜனாதிபதி?

அக்.30-ல் தேவர் ஜெயந்தி விழா நடைபெறவுள்ளது. இதில் துணை ஜனாதிபதி CP ராதாகிருஷ்ணன் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்.28-ல் தமிழகம் வரும் அவர், கோவையில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அக்.29-ல் மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்கும் அவர், 30-ம் தேதி மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பசும்பொன் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


