News August 11, 2025
FLASH: விஜய்யை சந்தித்த GCC தூய்மை பணியாளர்கள்

சென்னை பனையூரில் உள்ள TVK அலுவலகத்தில் விஜய்யை, தூய்மை பணியாளர்கள் சந்தித்து பேசினர். தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருநகர சென்னை மாநகராட்சி(GCC) தூய்மை பணியாளர்கள் 11-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். CPM, NTK, DMDK உள்ளிட்ட கட்சிகள் அவர்களுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விஜய்யை போராட்ட குழு நேரில் சந்தித்துள்ளது.
Similar News
News August 11, 2025
என் சாவுக்கு 3 பேரு தான் காரணம்.. மாணவி சோக முடிவு

ராகிங் கொடுமை ஒரு கல்லூரி மாணவியின் சாவிற்கு காரணமாகியுள்ளது. கேரளாவில் கடிதம் எழுதி வைத்துவிட்டு B.A. படிக்கும் மாணவி அஞ்சலி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கடிதத்தில், ‘எனது மரணத்திற்கு காரணம் இந்த 3 பேர் தான். என்னை மன ரீதியாக தொல்லை கொடுத்து சோர்வடைய செய்தது வர்ஷா, பிரதீப் மற்றும் பிற நண்பர்களே’ எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது, 3 பேரையும் போலீஸ் விசாரித்து வருகிறது. எதற்கும் தற்கொலை தீர்வல்ல!
News August 11, 2025
ஜப்பான்காரன், ஜப்பான்காரன் தான்!

ஜப்பானில் அலுவலக பார்க்கிங் தொடர்பான ஒரு விதி, அவர்கள் ஏன் முன்னேறி இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. அலுவலகத்துக்கு பணியாளர்கள், வேலை நேரத்துக்கு முன்பே வந்தால், அவர்கள் தங்கள் வாகனத்தை பார்க்கிங் இடத்தில் தொலைவில் நிறுத்த வேண்டும். ஏன் தெரியுமா? தாமதமாக வரும் பணியாளர்கள், பார்க்கிங்கில் முன்புறம் காலியாக உள்ள இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு, நேரத்துக்கு பணிக்கு வர இந்த ஏற்பாடாம்.
News August 11, 2025
மினிமம் பேலன்ஸை வங்கிகளே முடிவு செய்யலாம்: RBI கவர்னர்

அண்மையில் ICICI வங்கி, மினிமம் பேலன்ஸை ₹50,000-மாக <<17350157>>உயர்த்தியது<<>> வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, மினிமம் பேலன்ஸ் நிர்ணயிப்பது அந்தந்த வங்கிகளின் விருப்பம். இது RBI வரம்புக்கு உட்பட்டதல்ல என்று தெரிவித்துள்ளார். அனைவருக்கும் வங்கிக் கணக்கு அவசியம் என அரசு வலியுறுத்தும் நிலையில், மினிமம் பேலன்ஸை உயர்த்துவது சரியா?