News October 20, 2025
FLASH: இந்தாண்டு ₹7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டை விட இந்தாண்டு ₹1,000 கோடி கூடுதலாக, அதாவது ₹7,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகியுள்ளதாக பட்டாசுகள் வணிக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 7 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த தீபாவளி சிவகாசி மக்களுக்கு உண்மையிலேயே சரவெடிதான்..
Similar News
News March 13, 2026
பாகிஸ்தான் அணிக்கு கொலை மிரட்டல்!

வங்கதேசத்துடனான முதல் ODI-யில் பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்போட்டியில் வங்கதேசம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அந்நாட்டின் Ex வீரர் பாசித் அலி, வங்கதேசத்துடனான போட்டிக்கு உத்தி வகுத்த நபரை சுட்டுத்தள்ள வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 13, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 13, மாசி 29 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:00 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: தசமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
News March 13, 2026
அதிமுகவிடம் 10 இடங்களை கேட்கும் ஜான் பாண்டியன்

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அதிமுக விரைவில் தொடங்கும் என தமமுக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். அதிமுகவிடம் 10 தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், பேச்சுவார்த்தையின் மூலம் சுமுகமாக முடிவு எட்டப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும், NDA கூட்டணிக்கு விஜய் வருவார் என்பது வதந்தி என்றும் அவர் தங்கள் கூட்டணிக்கு உறுதியாக வரமாட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


