News October 12, 2025
FLASH: சிக்கன் விலை உயர்வு

நாமக்கல் சந்தையில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ₹3 அதிகரித்துள்ளது. இதனால், கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ ₹95-க்கு விற்பனையாகிறது. முட்டைக்கோழி கிலோ ₹120-க்கும், முட்டை ₹5.50-க்கும் விற்பனையாகிறது. சென்னையை பொறுத்தவரையில் கறிக்கோழி கிலோ 160-க்கும், தோல் நீக்கிய கறி கிலோ ₹200-₹220 வரையிலும் விற்பனையாகிறது. புரட்டாசி மாதம் நிறைவடைய உள்ளதால் சிக்கன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. உங்கள் ஊரில் விலை என்ன?
Similar News
News October 12, 2025
கில்லை பயமுறுத்திய கம்பீர்; என்ன சொல்லிருக்காரு பாருங்க

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடமே கில்லை பயமுறுத்தும் அளவுக்கு தான் பேசியதாக கம்பீர் தெரிவித்துள்ளார். ஆழ்கடலில் உன்னை தள்ளிவிட்டிருக்கிறோம், ஒன்று மூழ்கிப்போ அல்லது உலகிலேயே சிறந்த நீச்சல் வீரனாக வா என கில்லிடம் கம்பீர் கூறியதாக தெரிவித்திருக்கிறார். அதோடு, எதிர்ப்புகள் கிளம்பினாலும் தற்போது வரை கில் அனைத்தையும் சிறப்பாக செய்வதாக அவர் பாராட்டியுள்ளார்.
News October 12, 2025
இருமல், சளியா? Syrup-க்கு Bye, இதோ தங்க கசாயம்!

இருமல், சளியில் இருந்து விடுபட <<17955802>>Syrup<<>>எடுக்கலாம் என்றால், அதில் இப்போ பிரச்னை; இந்நிலையில், தங்க கசாயம் சாப்பிட்டாலே போதும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள். செய்முறை: ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில், மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன், பனை வெல்லம் சுவைக்கு ஏற்ப, திரிகடுகப் பொடி 10 மி.கி. போட்டு தினமும் அருந்த வேண்டும். பலன்கள்: இந்த கசாயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், உடலில் உள்ள தொற்றுகளை நீக்கும்.
News October 12, 2025
காசாவில் அமைதி ஒப்பந்தம்: இறுதியாகாத மோடி பயணம்!

காசாவில் போரை நிறுத்தி அமைதியை மீட்பது குறித்து எகிப்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில், டிரம்ப் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். PM மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காசாவில் அமைதியை கொண்டுவருவது குறித்து இறுதிக்கட்ட ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மோடியின் பயணம் இன்னும் இறுதியாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.