News October 19, 2025
FLASH: சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, சீமான் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்தாண்டு நவ. மாதம் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய சீமான், நீதிமன்ற செயல்பாடுகளை ஆபாச வார்த்தைகளால் பேசியதாக கூறி சார்லஸ் அலெக்சாண்டர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது, எழும்பூர் கோர்ட் உத்தரவின் அடிப்படையில், திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News October 19, 2025
காசை சேமிப்பவர்களுக்கு மிகப்பெரிய LOSS!

உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய சந்தை வீழ்ச்சி கூடிய விரைவில் நடக்கப்போவதாக பொருளாதார நிபுணர் ராபர்ட் கியோசகி எச்சரித்துள்ளார். பணத்தை சேமிப்பவர்களை LOSERS என அழைக்கும் அவர், வரும்காலத்தில் அந்த பணத்தின் மதிப்பு குறையும் என கூறியுள்ளார். அதனால், இப்போதே பாசிடிவ் நெகட்டிவ்களை ஆராய்ந்து பணத்தை தங்கம், வெள்ளி, பிட்காயினில் முதலீடு செய்யுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
News October 19, 2025
உலகக்கோப்பையில் Ro-Ko விளையாடுவது சந்தேகமா?

ஆஸி.,-க்கு எதிரான முதல் ODI-ல் 14 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ரோஹித் அவுட்டாக, இன்னொரு பக்கம், கோலி ரன்களே எடுக்காமல் வெளியேறினார். இதனால் கடுப்பான Fans, இருவரும் ஓய்வு பெறுவதே மேல் என கமெண்ட் செய்து வருகின்றனர். இப்படியே சென்றால் இவர்கள் இருவரும் உலகக்கோப்பையில் விளையாடுவது சந்தேகம்தான் எனவும் வருத்தம் தெரிவிக்கின்றனர். Ro-Ko பெர்பார்மென்ஸ் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
News October 19, 2025
BIG ALERT: தமிழகத்தில் வெளுத்து வாங்கும் பேய் மழை

TN-ல் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று(அக்.19) கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக சென்னையில் வரும் 21, 22-ம் தேதிகளில் கனமழையும், 23-ம் தேதி அதி கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.