News March 17, 2024
FLASH: பிக்பாஸ் வெற்றியாளர் கைது

இந்தி பிக்பாஸ் OTT 2 நிகழ்ச்சியின் வெற்றியாளர் எல்விஷ் யாதவ் நொய்டா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யூடியூபரான இவர், பாம்பு விஷத்தை அனுமதியின்றி விற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்விஷ் சில மியூசிக் வீடியோக்களிலும் நடித்து வட இந்திய இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்துள்ளார். இந்நிலையில், இவரது கைது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Similar News
News August 7, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 7, 2025
ஆம்ஸ்டராங் வழக்கு: குண்டர் சட்டம் 17 பேருக்கு ரத்து

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் 27 பேர் கைது செய்யப்பட்டு அதில் 26 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இவர்களில் 17 பேர் தங்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி HC-ல் மனு அளித்தனர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் இதே காரணம் கொண்டு அவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்றார்.
News August 7, 2025
யூட்யூப் காட்டி சோறு ஊட்டும் பெற்றோரா?

யூடியூப் காட்டித்தான் இன்று குழந்தைகளை வளர்க்கவே செய்கிறோம். துள்ளல் பாடல்கள், கார்ட்டூன் என வீட்டில் மட்டுமல்லாது, பொது இடங்களிலும் குழந்தைகளிடம் செல்போனை கொடுத்துவிடுகிறோம். இதனால் சிறுவயதிலேயே கண் பிரச்னைகள், தூக்கமின்மை, மன உளைச்சல் வரை ஏற்படுகின்றன. இப்படி பழக்கினால் குழந்தைகளை போனிடமிருந்து மீட்கவே முடியாது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நீங்கள் எப்படி?