News October 27, 2025
FLASH: பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு

TN-ல் 2024-25 கல்வி ஆண்டில் 311 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லாதது தெரியவந்துள்ளது. இந்த பள்ளிகளில் 432 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள போதிலும், மாணவர் சேர்க்கை இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News October 27, 2025
தங்க நகை: இப்படியொரு கட்டுப்பாடா?

கல்யாண வீடுகள்ல பெண்கள் நிறைய தங்க நகைகள் அணிவதற்கு இந்த கிராமத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்கத்தில் கம்மல், மூக்குத்தி, தாலி அணியலாம். ஆனால் ஆடம்பரமாக அதிக அளவு நகைகள் போட்டுட்டு வந்தா ₹50 ஆயிரம் ஃபைன். ஏன் தெரியுமா? பணக்காரங்கள பார்த்து ஏழைகளும் நகைகள் சேர்க்க கடன் வாங்கி சிரமப்படுவதால இப்படி ஒரு கட்டுப்பாடாம். உத்தராகண்ட்ல இருக்குற இந்த கந்தார் கிராமத்த இந்தியாவே வியந்து பாக்குது.
News October 27, 2025
சற்றுமுன்: கண்ணீருடன் விஜய்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கண்ணீருடன் விஜய் ஆறுதல் கூறி வருகிறார். நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கும் 33 குடும்பங்களை தனித்தனியாக விஜய் சந்தித்து வரும் நிலையில், அவருடன் கட்சி நிர்வாகிகள் யாரும் இல்லை. மேலும் கூடுதல் நிதியுதவி செய்ய ஏதுவாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் சுயதொழில், சொந்த வீடு, கடன் பிரச்னை உள்ளிட்ட கோரிக்கைகளை எழுத்துபூர்வமாகவும் பெறுகிறார்.
News October 27, 2025
CM பதவியை தக்கவைக்க அமைச்சரவையில் மாற்றம்

கர்நாடகாவில் காங்., ஆட்சி அமைத்தபோது, CM பதவியை சித்தராமையா, DK சிவக்குமார் ஆளுக்கு 2.5 ஆண்டுகள் பங்கிட ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, நவ.20 உடன் சித்தராமையா CM ஆகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. ஆனால், பதவியை விட விரும்பாத சித்தராமையா, அதற்காக அமைச்சரவையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கு சில அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நவ.15-ல் டெல்லி மேலிடத்தை சந்திக்கிறார்.


