News February 22, 2026

FLASH: 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது சிபிஎம்!

image

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை மார்க்சிஸ்ட்(CPM) அமைத்துள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையிலான இக்குழுவில் கனகராஜ், சாமுவேல், கண்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கடந்த 2021 தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்ற இக்கட்சி வரும் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டுப் பெறும் திட்டத்தில் உள்ளது.

Similar News

News February 26, 2026

வங்கி கணக்கில் ₹2,000.. வந்தாச்சு HAPPY NEWS

image

நாடு முழுவதும் சுமார் 10 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் அடுத்த வாரத்திற்குள் மத்திய அரசு ₹2,000 டெபாசிட் செய்யவுள்ளதாம். ஆம், PM KISAN திட்ட பயனாளிகளுக்குதான் இந்த நற்செய்தி. திட்டத்தின் 22-வது தவணை தொகையை விடுவிக்க அரசு தயாராகி வருகிறது. அதற்குள், KYC அப்டேட், வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு உள்ளிட்ட பணிகளை நிறைவு செய்யுங்கள். திட்டத்தின் பயனாளிகளை pmkisan.gov.in தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

News February 26, 2026

விவாகரத்தில் டாப் 5 லிஸ்ட்டில் தமிழகம்!

image

2025-ல் இந்தியாவில் 8.27 லட்சம் தம்பதிகள் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மாநில வாரியாக மகாராஷ்டிரா (18.7%), கர்நாடகா (11.7%) முதல் 2 இடங்களில் உள்ளன. தமிழ்நாடு (7.1%) 5-ம் இடத்தில் உள்ளது. இதில், 33% வழக்குகள் இருதரப்பு சம்மதத்துடன் நடைபெறுகின்றன. மீதமுள்ளவை குடும்ப வன்முறை & திருமணத்தை மீறிய உறவு போன்றவற்றால் ஏற்படுகின்றன. 58% விவாகரத்துகளை பெண்களே தொடங்குகின்றனர்.

News February 26, 2026

பிரதமர் மோடிக்கு ஜெயில் தண்டனை.. FACTCHECK

image

PM மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் மீது நீதித்துறை நடவடிக்கை எடுக்க SC தலைமை நீதிபதி சூர்யகாந்த் உத்தரவிட்டிருப்பதாகவும், அவர்கள் சிறையில் இருப்பது போலவும் SM-ல் தகவல் பரவி வருகிறது. JANTA NEWS TV என்ற யூடியூப் சேனலில் வெளியான இந்த தகவல் பொய்யானது என மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம் (PIB FACTCHECK) விளக்கம் அளித்துள்ளது. மேலும், இதுபோன்ற பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!