News September 29, 2025
FLASH: 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

3 ஐஏஎஸ் அதிகாரிகளை TN அரசு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி இணை ஆணையராக கற்பகம் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநராக அண்ணாதுரையும், பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டு ஆணையராக ஜான் லூயிஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News January 15, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 15, தை 1 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:00 AM & 1:00 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: துவாதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
News January 15, 2026
ELECTION: தவெகவுடன் கூட்டணி அமைக்கிறதா SDPI?

மக்களுக்காக உழைப்பதற்கு யார் வந்தாலும் அவர்களை வரவேற்க தயாராக இருப்பதாக SDPI தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். மாஸ் லீடராக வரும் விஜய், மக்களுக்கு பணி செய்ய வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். இம்மாத இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் எங்கள் கட்சி மாநில குழு கூட்டம் நடைபெறும். அதில் தவெகவா அல்லது யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News January 15, 2026
சிறு வீட்டுப் பொங்கல்…!

சிறு வீட்டுப் பொங்கல் என்பது நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் வழக்கத்தில் உள்ள நடைமுறை. ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் குழந்தைகள் அனைவரும் சேர்ந்து, தாங்களாகவே வீடுகள் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் அருகில் பொங்கல் வைத்து படையலிட்டு சாமி கும்பிட்டு மகிழ்வார்கள். தற்போது ஒரு சில வீடுகளில் மட்டுமே இந்த சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. உங்கள் பகுதியில் இம்மாதிரி செய்வதுண்டா?


