News January 2, 2026

FLASH: 2,700 பேர் மரணம்

image

தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும், இயற்கையின் கோரத் தாண்டவத்திற்கு முன் யாராலும் தப்ப முடியாது. 2025-ல் இயற்கை சீற்றங்களால் நாடு முழுவதும் உயிரிழந்தவர்கள் தொடர்பான விவரத்தை IMD வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓராண்டில் மட்டும் 2,760 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம், புயல், கனமழை, வெப்ப அலை என அதிதீவிர வானிலை நிகழ்வுகளே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News January 10, 2026

தஞ்சையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்!

image

தஞ்சாவூரில் அமைந்துள்ள மன்னர் சரபோஜி அரசு கலை கல்லூரியில் இன்று (ஜனவரி 10) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 8 மணியளவில் தனியார் துறையை சார்ந்த பல நிறுவனங்கள் வருகை புரிந்து நேர்காணல் மூலமாக நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். வேலை தேடும் அனைவரும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 10, 2026

தங்கம் விலை கிடுகிடுவென மாற்றம்

image

வார இறுதி நாளான இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, 1 அவுன்ஸ்(28g) தங்கம் $56.97 உயர்ந்து $4,509-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியின் விலையும் அவுன்ஸ் $4.34 உயர்ந்து $79.91-க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக இந்திய சந்தையிலும் இன்று தங்கம் விலை(நேற்றைய விலை :சவரன் ₹1,02,400) உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 10, 2026

விஜயகாந்துக்கு பாரத ரத்னா வழங்குக: தேமுதிக

image

விஜயகாந்த் இறந்த பிறகு கடலூரில் நடைபெற்ற முதல் மாநாட்டில், தொண்டர்களின் எழுச்சி அதிகமாக இருந்ததாக பிரேமலதா கூறியுள்ளார். மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும் என தேமுதிக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன், பொது இடத்தில் விஜயகாந்திற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என அவர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!