News November 6, 2025

FLASH: விலை ஒரே அடியாக ₹2,000 உயர்ந்தது

image

<<18217339>>தங்கம்<<>> விலையைத் தொடர்ந்து, வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு காலையில் ₹1,000 அதிகரித்திருந்தது. இந்நிலையில், மாலையில் மேலும் ₹1,000 உயர்ந்து நடுத்தர மக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் வெள்ளி ₹165-க்கும், 1 கிலோ ₹1.65 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Similar News

News November 6, 2025

SBI PO பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

image

பொதுத்துறை வங்கியான SBI-ல் காலியாக உள்ள 541 Probationary Officer (PO) பணியிடங்களுக்கான, மெயின்ஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை <>இங்கே<<>> கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இப்பட்டியலில் உள்ளவர்களுக்கு விரைவில் சைக்கோமெட்ரிக் டெஸ்ட் நடத்தப்பட உள்ளது. கடந்த ஆகஸ்ட் 2, 4, 5-ம் தேதிகளில் பிரிலிம்ஸ் தேர்வும், கடந்த செப்டம்பர் 13 மெயின்ஸ் தேர்வும் நடத்தப்பட்டன.

News November 6, 2025

’பாஜக நிர்வாகிக்கு மூளை மழுங்கிப்போச்சு’

image

மும்பையில் இஸ்லாமியர்கள் மேயராக வரமுடியாது என பாஜக நிர்வாகி அமீத் சதாம் கூறியதற்கு உத்தவ் தாக்கரே தரப்பை சேர்ந்த ஆனந்த் துபே பதிலடி கொடுத்துள்ளார். மும்பை பாஜக தலைவரானதில் இருந்து அமீத்துக்கு மூளை மழுங்கிப்போனதாக சாடிய அவர், பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்தில் இப்படி பேசுகிறார் என கூறினார். இதனையடுத்து பாஜக நிர்வாகியை சாடிய ஆனந்தே, மராத்தி இந்துதான் மும்பையில் மேயராக வருவார் எனவும் கூறியுள்ளார்.

News November 6, 2025

விஜய்யுடன் கூட்டணி… முடிவை அறிவித்தார்

image

தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய்தான் CM வேட்பாளர் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் நிச்சயம் தவெக தங்கள் கூட்டணிக்கு வரும் என அதிமுக நம்புகிறது. இந்நிலையில், தவெக உடனான கூட்டணி குறித்து வெளிப்படையாகவா பேச முடியும் என RB உதயகுமார் கேட்டுள்ளார். நடக்க வேண்டிய நேரத்தில், TN மக்களுக்கு நன்மை தரும் வகையில் அது நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுக + தவெக கூட்டணி உறுதியாகுமா?

error: Content is protected !!